full screen background image

“தேவர் மகன்’ 2-ம் பாகத்தை உருவாக்குவேன்” – கமல்ஹாசன் தகவல்

“தேவர் மகன்’ 2-ம் பாகத்தை உருவாக்குவேன்”  – கமல்ஹாசன் தகவல்

தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

1993-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘தேவர் மகன்’. சிவாஜி, கமல், கவுதமி, ரேவதி, நாசர், ‘தலைவாசல்’ விஜய், ரேணுகா, வடிவேலு என்று பெரிய நட்சத்திரங்கள் நடிப்பில் ‘இசைஞானி’ இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படம் அந்தாண்டின் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இத்திரைப்படம் இந்தியில்கூட மொழி மாற்றம் செய்யப்பட்டது.

இப்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக கமல்ஹாசன் ‘மலையாள மனோரமா’ டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம், விஜய் சேதுபதி இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தை ‘மாலிக்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கவிருக்கிறார். இவர் கமலின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் தொகுப்பாளர். அந்தப் பட வேலைகள் சமயத்தில் மகேஷின் பணித் திறனை அறிந்த கமல், “நீ நிச்சயமாக சிறந்த இயக்குநராக வருவாய்” என்று அப்போதே வாழ்த்தினாராம். அந்த வாழ்த்துக்கள் பலித்த கையோடு கமல்ஹாசனின் சொந்தப் படத்தையும் இயக்கப் போகும் வாய்ப்பையும் பெறுகிறார் மகேஷ் நாராயணன்.

இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் கமல்ஹாசன் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

 
Our Score