நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம் ‘காதம்பரி’

நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம் ‘காதம்பரி’

அறிமுக இயக்குநரான அருள் இயக்கி தயாரித்து மற்றும் நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘காதம்பரி’.

முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு பேய் கதையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர்.

காதம்பரி படம் பற்றி இயக்குநர் அருள் பேசும்போது, “நயன்தாராவின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா ஏற்றுக் கொண்டிருந்த கதாபாத்திரத்தின் பெயர் ‘காதம்பரி’. அந்தப் பெயரைத்தான் எனது படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன்.

முழுக்க, முழுக்க திகில் படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஆந்திரா அருகிலுள்ள ஒரு அடர்ந்த காட்டில் இருக்கும் ஒரே ஒரு வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும்..” என்றார்.

இப்படி ஒரு குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின்  டிரெயிலரை புகழ் பெற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

நடிகைகள் பார்வதி நாயர், நீலிமா இசை மற்றும் கிரிசா குரூப் ஆகியோர்களும் நடிகர்கள் டேனியல் பாலாஜி, டேனியல் அண்ணி போப் ஆகியோர்களும் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் தயாநிதி, கணேஷ் சந்திரசேகரன் ஆகியோர்களும் மற்றும் புகழ் பெற்ற தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆகியோர்களும் இணைந்து ‘காதம்பரி’  டிரைலரை வெளியிட்டு உள்ளனர்.

Our Score