சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும்படி தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும்படி தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர் அதிபர்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர். தியேட்டர் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்தபோது, “தற்போது தமிழ்நாட்டில் செயல்படக் கூடிய நிலைமையில் 1020 தியேட்டர்கள் இருக்கின்றன. அவற்றில் 25 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் திரையரங்க ஊழியர்கள். திரையரங்கை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தவர்கள் உள்பட 3 லட்சம் பேர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதனால் மத்திய, மாநில அரசுகள் சினிமா தியேட்டர்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தியேட்டருக்கு வருகிறவர்களை காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது. அதனை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் சொல்லும் நோய் தடுப்பு விதிமுறைகளை 100 சதவிகிதம் அப்படியே கடைபிடிப்போம். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வோம். எனவே தியேட்டர்களை திறந்து 3 லட்சம் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்…” என்றார்.

Our Score