டி.என்.எஸ். மூவி புரொடெக்சன்ஸ் சார்பில் செல்வி சங்கரலிங்கம் தயாரித்திருக்கும் தமிழ்த் திரைப்படம் ‘க.க.கா.போ.’
இத்திரைப்படத்தில் கேசவன், சாக்ஷி அகர்வால் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். மேலும் வடிவுக்கரசி, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, எம்.எஸ். பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி, ரோபோ ஷங்கர் உட்பட 25-க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
இயக்கம் – பி.எஸ்.விஜய், இசை – தீனா, பி.சி.சிவம், சி.வி.அமரா, ஒளிப்பதிவு – இக்பால், விக்ரம், படத் தொகுப்பு – பிரபாகர், கலை – ரவீந்திரன், மகேந்திரன், பாடல்கள், கானா பாலா, பூ கார்த்திக், பி.எஸ்.விஜய், சண்டை பயிற்சி – விஜய் ஜாகுவார், பாடியவர்கள் – கானா பாலா, முகேஷ், திவாகர், ரீட்டா, ஸ்ருதிகா, காவி வர்ஷினி, நடனம் – சாண்டி, சுரேஷ்.
இந்தப் படத்தின் பெயர் இப்படியொரு வித்தியாசமாக இருப்பதன் காரணத்தை இயக்குநரிடம் கேட்டதற்கு “நேரம் வரும்போது சொல்கிறேன்..” என்று சொல்லியே காலத்தை ஓட்டிவிட்டார்.
இதற்கிடையில் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் கேசவன் மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விபத்தில் மரணமடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நலன் குமாரசாமி இயக்கும் “காதலும் கடந்து போகும்” படத்தையும் இதேபோல “கா.க.போ.” என்று சுருக்கமாகக் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தியதில் இந்தப் படக் குழுவினர் பதறிவிட்டனர்.
கடைசியாக இனியும் காத்திருந்தால் மொத்தப் பெயரையும் சுட்டுவிடுவார்கள் என்று நினைத்து அந்த ‘க.க.கா.போ.’ என்கிற டைட்டிலுக்கான அர்த்தத்தை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்கள் படக் குழுவினர்.
அதாகப்பட்டது என்னவெனில்.. ‘க.க.கா.போ.’ என்பதன் விரிவாக்கம் ‘கவிதாவும், கண்ணதாசனும் காதலிக்கப் போறாங்க’ என்பதுதானாம்..!
நல்லா சொல்றாங்கய்யா டீடெயிலு..!









