full screen background image

வெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..!

வெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..!

உலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ் பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’. தற்போது இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில், ஹாரர் கலந்த பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகை ராய்லட்சுமி பிரதான வேடத்தை ஏற்றிருக்கிறார். மேலும் சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தெலுங்கில் ‘லட்சுமி என்டிஆர்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘காஞ்சனா-2’ படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார்.

rai lakshmi

இப்படத்தை அறிமுக இயக்குநரான வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் மல்டி மீடியா படித்த பெங்களூர்க்காரர். சில ஆண்டுகள் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும்போது, “சிண்ட்ரெல்லா’ என்கிற பெயர் குழந்தைகளிடம் மிகவும் பரிச்சயமானது. ‘சிண்ட்ரெல்லா’ என்கிற பெயரில் ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன. இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல… பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது.

ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள  இமேஜை உடைக்கும்படி இருக்கும். அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படப் பாத்திரம் எதிர்பாராத தோற்ற மாற்றத்தைத் தரும். நடிப்பிலும் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும்.

rai lakshmi

சாக்ஷி அகர்வால் ஒரு எதிர்பாராத எதிர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்.

இது ஒரு பேய்ப் படம்தான். ஆனால் வழக்கமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிற சூத்திரங்களில் இருந்து விலகி புதுப் பாணியில் புதுவித பாதையில் பயணிக்கிற கதையில் உருவாகியிருக்கிற படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும். இந்த ‘சிண்ட்ரெல்லா’வை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்..” என்கிறார் இயக்குநர் வினோ வெங்கடேஷ்.

படம் பார்க்கும் ரசிகர்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதில்லை.. கதையையும், கதை சொல்லல் முறையையும்தான் பார்க்கிறார்கள். அந்த வகையில் பொழுதுபோக்கிற்கு நம்பிக்கை தரும் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்று கூறலாம்.

cindrellaa movie posters

இதன் டீசரை  இந்திய அளவில் புகழ் பெற்றவரும், பரபரப்புக்குப் பெயர் பெற்றவருமான இயக்குநர் ராம்கோபால் வர்மாவும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் நேற்று மாலை 7.30 மணிக்கு வெளியிட்டார்கள்.

இருவருமே இளமையும் திறமையும் கொண்ட இந்தப் படக் குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்கள்.  மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது படக் குழு. இந்த  டீசர் வெளியான சில நொடிகளிலேயே  ஹிட்களை அள்ளிக் கொண்டிருக்கிறது.

இதோ :

 டீசர் லிங்க்

https://youtu.be/A2CPQEW8MVY

Our Score