full screen background image

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மேடை நாடகப் படைப்புகள்..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மேடை நாடகப் படைப்புகள்..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், 1953-ம் வருடத்தில் இருந்தே நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார்.  ஆனால் அவற்றை இப்போது காலவரிசைப்படி பட்டியிலிட முடியவில்லை.

ஆனாலும் Cinema Fanatic என்னும் ஓரங்க நாடகத்தில்தான் கே.பாலசந்தரை தான் முதன்முதலில் அண்ணாமலை மன்றத்தில் சந்தித்ததாக கே.பி.யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான நாயர் ராமன் தெரிவித்தார். அவருடைய கூற்றுப்படி அதுதான் தனது முதல் நாடகமாக இருக்கும் என்று கே.பி.யும் தெரிவித்தார்.

1953-ம் ஆண்டில் இருந்து தான் சினிமாவில் மிக பிஸியான காலம்வரையிலும் 32 நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கியிருக்கிறார் கே.பாலசந்தர்.

தனது கடைசி படமான ‘பொய்’ படத்திற்குப் பிறகு கிடைத்த இடைவெளியில், 2011-ல் ‘பெளர்ணமி’ என்ற நாடகத்தையும், 2013-ல் ‘ஒரு கூடை பாசம்’ என்ற நாடகத்தையும் மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு எழுதி, இயக்கம் செய்து மேடையில் நிகழ்த்திக் காட்டினார் கே.பி..

1. Cinema Fanatic – Monoacting by K.B. Annamalai Mandram

2. Moliere’s Cuckold (By A.G’s office staff. KB actred in it) Directed by G.B.S.

3. If it were to happen – Written Directed and Acted

4. Ten Commendments (சுவாமிநாதன் – ஏ.ஜி.அலுவலகத்தில் கே.பி.யின் சக ஊழியர்)

5. யார் வேஷதாரி (சோ எழுதிய நாடகம் – ஏ.ஜி. அலுவலக சங்கத்திற்காக) இயக்கியது கே.பாலசந்தர்.

6. மனோரதம் (டி.கே.கோவிந்தன்) – நடிப்பு கே.பி.

7. புஷ்பலதா – ஓரங்க நாடகம் – எழுதி நடித்த்து கே.பி.

8. Why Not – சோ எழுதிய நாடகம் – விவேகா பைன் ஆர்ட்ஸிற்காக இயக்கியது கே.பி.

9. Leave Me Alone – தமிழ் நாடகம் – ஏ.ஜி. ஆபீஸிற்காக

10. என்றும் பதினெட்டு – நாடகம் – ஏ.ஜி. ஆபீஸிற்காக

11.  புதைந்த உண்மை – நாடகம் – ஏ.ஜி. ஆபீஸிற்காக

12. How Handsome You Are – நாடகம் – ஏ.ஜி.ஆபீஸிற்காக

13. Production No.3 – எழுத்து-நடிப்பு-இயக்கம் கே.பி.

14. சிவனா சக்தியா – எழுதி, இயக்கி நடித்த்து கே.பி.

15. அவரே என் கணவர் (என்.பி.ராமையா) – நடிப்பு

16. He or She (G.Swaminathan-English) – நடிப்பு – இயக்கம்

17. Post Office (Ravindranath Tagore) – இயக்கம் கே.பி.

18. Last Judgement – எழுதி, இயக்கி நடித்தது கே.பி.

19. ஏக் பத்தி சார் ராஸ்தா – எழுத்து-இயக்கம் கே.பி.

20. வினோத ஒப்பந்தம் – எழுத்து-இயக்கம் – கே.பி.

21. Courage of Conviction – English original of Major Chandrakanth – எழுத்து நடிப்பு இயக்கம் – கே.பி.

22. மேஜர் சந்திரகாந்த் – எழுத்து இயக்கம் – கே.பி.

23. சர்வர் சுந்தரம் – எழுத்து-இயக்கம் கே.பி.

24. மெழுகுவர்த்தி – எழுத்து – இயக்கம் – கே.பி.

25. நீர்க்குமிழி – எழுத்து-இயக்கம் – கே.பி.

26. நாணல் – எழுத்து – இயக்கம் – கே.பி.

27. எதிர் நீச்சல் – எழுத்து – இயக்கம் – கே.பி.

28. நவக்கிரகம் – எழுத்து – இயக்கம் – கே.பி.

29. சதுரங்கம் – வி.எஸ்.ராகவன் ஐ.என்.ஏ. தியேட்டர்ஸ் – வசனம்-கே.பி.

30. கெளரி கல்யாணம் – மேடைக் கதை வசனம் – கே.பி. – ஐ.என்.ஏ. தியேட்டர்ஸ்

31. எங்கிருந்தோ வந்தாள் – நடிப்பு – கே.பி. – ஐ.என்.ஏ. தியேட்டர்ஸ்

32. Sixth Finger – எழுத்து – இயக்கம் – கே.பி.

33.  பெளர்ணமி – எழுத்து – இயக்கம் – கே.பி.

34. ஒரு கூடை பாசம் – எழுத்து – இயக்கம் – கே.பி.

Our Score