‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பெற்ற விருதுகளின் பட்டியல்..!

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பெற்ற விருதுகளின் பட்டியல்..!

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பெற்றிருக்கும் விருதுகளும், வாங்கிய பாராட்டுகளும் ஏராளம்.. ஏராளம்.. அவற்றில் பலவற்றை இங்கே தொகுத்தளிக்கிறோம் :

மத்திய அரசு விருதுகள்

1970 – இரு கோடுகள் – சிறந்த தமிழ்ப் படம்

1974 – அபூர்வ ராகங்கள் – சிறந்த தமிழ்ப் படம்

1982 – தண்ணீர் தண்ணீர் – சிறந்த தமிழ்ப் படம்

1984 – அச்சமில்லை அச்சமில்லை – சிறந்த தமிழ்ப் படம்

1981 – தண்ணீர் தண்ணீர் – சிறந்த திரைக்கதை

1987 – இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது

1989 – ருத்ர வீணா (தெலுங்கு) – சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது

1991 – ஒரு வீடு இரு வாசல் – சமூகப் பிரச்சினைக்கான தேசிய விருது

1993 – ரோஜா – சிறந்த திரைப்படத்துக்கான நர்கீஸ் தத் விருது.(தயாரிப்பாளர்)

1983-ம் வருடத்திய தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்களின் தலைவராக கே.பி. செயல்பட்டார்.

மாநில அரசின் விருதுகள்

சிறந்த கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் என்ற வகையில் தமிழக அரசின் விருதுகளை பல முறை பெற்றிருக்கிறார் கே.பி.

அவர் இயக்கிய ‘பாமா விஜயம்’, ‘தாமரை நெஞ்சம்’, ‘எதிர் நீச்சல்’, ‘அக்னி சாட்சி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’ போன்ற படங்கள் பல பிரிவுகளில் மாநில அரசின் விருதினைப் பெற்றன.

1973 – கலைமாமணி விருது

1982 – கோகிலம்மா – சிறந்த திரைக்கதைக்கான ‘நந்தி’ விருதினை ஆந்திர அரசு வழங்கியது.

1993 – புதுச்சேரி அரசின் கலைமாமேதை விருது

1994 – ஜாதி மல்லி – சிறந்த திரைப்படத்திற்கான மாநில அரசின் விருது

பிற விருதுகள் – சிறப்புகள்

1970 – இயக்குநர் சிகரம் – பல்வேறு ரசிகர்களின் சங்கங்கள் இணைந்து மதுரையில் வழங்கினர்.

1983 – சிறந்த திரைப்படத் தொழில் நுட்ப வல்லுனர் – தென்னிந்திய திரைப்பட தொழில் நுட்ப வல்லுனர்கள் சங்கம்.

1983 – ஏவி.எம். விருது

1983 – எம்.ஜி.ஆர். விருது – திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக – தென்னிந்திய திரைப்பட தொழில் நுட்ப வல்லுனர்கள் சங்கம்.

1987 – For the Sake of honour Award – திரைப்படங்கள் மூலம் சமூக சேவை செய்தமைக்காக சென்னை மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கிய விருது.

1990 – சித்ரமஹா சில்பி – திரைத்துறையில் சிறப்பான பங்களிப்புக்காக அனைத்துல அரிமா சங்க மாநாட்டில் வழங்கப்பட்டது.

1992 – தமிழக அரசின் அண்ணா விருது – சிறப்புப் பரிசு

1992 – இயல் செல்வம் – சென்னை முத்தமிழ்ப் பேரவை வழங்கியது.

1992 – சாதனையாளர் விருது – திரைப்பட ரசிகர்கள் சங்கம் வழங்கியது.

1992 – For the Sake of honour Award  – திரைப்படங்கள் மூலம் சமூக சேவை செய்தமைக்காக திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கியது.

1993 – For the Sake of honour Award – திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கியது.

1993 – For the Sake of honour Award – ஆம்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் வழங்கியது.

1993 – Pride in Workmanship Award – திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் வழங்கியது.

1993 – வி.சாந்தாராம் விருது – ரோஜா திரைப்படம் சிறந்த இரண்டாவது இந்தி படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

1994 – Vocational Excellence Award – ரோட்டரி சங்கங்கள், திருச்சி.

1994 – Vocational Excellence Award – ரோட்டரி சங்கம், சென்னை வடமேற்கு

1995 – Lifetime Achievement Award – Filmfare

1995 – Melvin Jones Award – சென்னை மெல்வின் ஜோன்ஸ் ரோட்டரி சங்கம் வழங்கியது.

1995 – Onida Pinnacle Award – கையளவு மனசு நெடுந்தொடருக்காக வழங்கியது.

1995 – சிறந்த நெடுந்தொடர் இயக்குநர் – கையளவு மனசு – சினிமா எக்ஸ்பிரஸ் விருது

1996 – Lifetime Achievement Award – சிங்கப்பூர் சினிமா ரசிகர்கள் அமைப்பு வழங்கியது.

1996 – சாதனையாளர் விருது – மலேசிய சினிமா ரசிகர்கள் அமைப்பு வழங்கியது.

1996 – வாழ்நாள் சாதனையாளர் விருது – தினகரன் நாளிதழ்

1997 – Contribution to TV Medium Award – Screen Videcon

1997 – For the sake of honour Award – நாடக, திரைப்பட, தொலைக்காட்சி சேவைக்காக – மத்திய அரசு ஊழியர்களின் நல்வாழ்வு சங்கம்.

2000 – படவுலக பிரம்மா – குவைத்வாழ் இந்திய குடிமக்கள் அளித்த பட்டம்.

2001 – பீஷ்ம விருது – தி ஆஷ்ரம் அமைப்பு வழங்கியது.

2001 – கலைஞர் விருது – முரசொலி அறக்கட்டளை

2001 – ஞானகலா பாரதி – நாடக, திரைப்பட சேவைக்காக – பாரத் கலாச்சார் வழங்கியது.

2005 – உழைப்பால் உயர்ந்த உத்தமர் – சென்னை ரோட்டரி சங்கம் வழங்கியது.

2006 – பாரதி விருது – வானவில் பண்பாட்டு மையம் வழங்கியது.

2006 – கலையுலக பாரதி – அபுதாபி தமிழ் அமைப்பு வழங்கியது.

2008 – Pride of Indian Cinema Award 2007 – Yuva Kala Vauhini, Hyderabad.

2009 – Lifetime Achievement Award – Jaya Tv

2009 – Nitya Kala Vipanchee – for outstanding service in the propagation of tamil theatre, presented by Dr.M.Balamuralikrishna.

2010 – டாக்டர் எம்.ஜி.ஆர். விருது

2010 – அறிவுக்களஞ்சியம் விருது – மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் வழங்கிய விருது.

2010 – நாடக சூடாமணி விருது – கிருஷ்ண கான சபா வழங்கியது.

2010 – வெள்ளித்திரை பாரதி விருது – புனே தமிழ்ச் சங்கம் அளித்த பட்டம்.

2011 – All India Award – Akkineni International Foundation, Hyderabad

2011 – Lifetime Achievement Award – Rotary International District 3230.

2011 – The Most Prestigious Indian Film Award in Memory of DADHA SAHEB PHALKE was awarded by the President of India in the National Film Festival in August.

2011 – டாக்டர் செவாலியே சிவாஜிகணேசன் விருது – விஜய் டிவி

2011 – Distinguished Citizen of the year by Hamsadhwani & Sri Krishna Sweets

2011 – The Mylapore Academy Award

2011 – Evergreen Icon Award by Ritz magazine

* திரைப்பட ரசிகர்கள் சங்கம் இதுவரையில் சிறந்த கதாசிரியர், மற்றும் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய வகையில் 29 முறைகள் இவருக்கு விருதுகளை வழங்கியது.

* ‘பிலிம்பேர்’ பத்திரிகை 12 முறை சிறந்த இயக்குநர் மற்றும், சிறந்த தயாரிப்பாளர் என்கிற வகையில் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளது.

* நாடகம், சின்னத்திரை துறைகளில் இவருடைய பங்களிப்புக்காக மைலாப்பூர் அகாடமி விருதினை 9 முறை பெற்றிருக்கிறார்.

கவுரவ டாக்டர் பட்டம்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் மூன்று  முறை டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

2005 – Doctor of Literature (Honaris Causa) – Sathyabhama Deemed University

2005 – Doctor of Literature (Honaris Causa) – Alagappa University, Karikudi

2007 – Doctor of Literature (Honaris Causa) – Madras University

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பற்றிய ஆய்வுகள் :

திரைப்படத் துறையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பங்களிப்பைப் பற்றி இதுவரையில் நான்கு ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

1. கே.பாலசந்தர் திரைப்படங்களில் வாழ்க்கை நெறிகள் – சு.விஸ்வநாதன் – எம்.ஃபில் பட்டத்திற்காக – தியாகராசர் கல்லூரி, மதுரை – 1988-89.

2. Content Analysis of Tamil Films, A Study in Sociology of Communication – D.Saravanan – for M.Phil., Kamaraj University, Madurai – 1989 – 90.

3. கே.பாலசந்தரின் தமிழ்த் திரைப்படங்கள் ஒரு திறனாய்வு – அ.தேவகி – எம்.ஃபில் பட்டத்திற்காக – தமிழாய்வுத் துறை – ஸ்ரீவாசவி கல்லூரி, ஈரோடு – ஜூன்-1990.

4. Portrayal of Women characters in K.Balachander’s Films – A dissertation submitted for the degree of Master of Arts in Communication – V.Vidhya – Department of communication, M.P.P. Vaishnav College for Women, Nungambakkam, Chennai – 1998-2000.

 

Our Score