full screen background image

‘ஆம்பள’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்..

‘ஆம்பள’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்..

நடிகர் விஷால் தயாரித்திருக்கும் ‘ஆம்பள’ படத்திற்கு யு சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி என்கிற தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷால் தயாரித்திருக்கும் படம் ‘ஆம்பள’. இதில் அவரே ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயின் ஹன்ஸிகா மோத்வானி. உடன் சந்தானம், பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் கவுதம், வைபவ், சதீஷ், விச்சு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘ஹிப்ஹாப் தமிழா’ இசைக் குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் இசையமைப்பாளர்களாக இதில் அறிமுகமாகியிருக்கிறார்கள். சுந்தர்.சி. இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் வரும் பொங்கல் தினத்தின்று ரிலீஸாகும் என்று படத்தின் துவக்கத்தின்போதே அறிவித்திருந்தார் விஷால். அது போலவே வரும் பொங்கல் தினமான 15-ம் தேதியன்று இந்தப் படம் ரிலீஸாவது உறுதி. அதோடு இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறதாம். 

வாழ்த்துகள்..!

Our Score