“பிரபலமான நடிக நடிகையர் நடிக்கும்போதுதான் சில கதாபாத்திரங்கள் ஜெயிக்கும். அப்பொழுதுதான் அந்த கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கும்…” என்கிறார் அறிமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா.
இவருடைய இயக்கத்தில் தற்போது ‘ஜித்தன்’ ரமேஷ் நாயகனாக நடிக்கும் ‘ஜித்தன் 2’ படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் இனியா, வி.டி.வி.கணேஷ், தம்பி ராமையா, ஜே.பி. மயில்சாமி மற்றும் சோனா ஆகியோர் நடித்துள்ளனர். புதுமுக நாயகி ஸ்ருதியும் இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.
“திகில் மற்றும் மர்மம் சுற்றி பின்னப்பட்ட கதைகளுக்கு எப்பொழுதும் அந்த படத்தின் போஸ்டர்ஸ் பிரதானமாக இருக்கும். அவ்விதமே ‘ஜித்தன் 2’ படத்தின் போஸ்டர்கள், பார்ப்பவர் எல்லோரையும் கவர்ந்து வெற்றிக்கு கட்டியம் கூறும்” என்கிறார் ராகுல். .