“என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்” ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல் சொல்கிறார்..!

“என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்” ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல் சொல்கிறார்..!

சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார்.

அதன் பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார். அப்போது, “அவரது அம்மாவான பாலிவுட்டின் கனவுக் கன்னி ஹேமமாலினியின் பயோ பிக்சர் உருவானால் அதில் நீங்கள் நடிப்பீர்களா..?” என்று பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த நடிகை ஈஷா தியோல்,

“என்னுடைய அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும்.. என் அம்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் வெளியாகி இருக்கிறது. படித்தேன். அது நன்றாக இருக்கிறது. அதேபோல யார் அதை படமாக எடுக்கப் போகிறார்கள், எப்படி எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்துதான், அதில் நடிக்க முடியுமா என தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக எனது அம்மாவின் அனுமதி இருந்தால் மட்டுமே அதில் நடிப்பேன்…” என்று கூறினார் இஷா தியோல்.

Our Score