full screen background image

சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’

சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’

டி.பி.கே. இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.டில்லி பாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘மாயமுகி.

தமிழ் மற்றும் தெலுங்கு என  இரு மொழிகளிலும் மிகப் பெரிய பொருட்செலவில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தில், ’இன்னொருவன்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘நீர்ப்பறவை’, ’வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் மனோசித்ரா நாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார்.

தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சத்யதேவ், ‘தூத்துக்குடி’ பட புகழ் கார்த்திகா, ஆம்னி, சுவாதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

பிரகாஷ் என்.பத்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெயன் பாலா இசையமைக்கிறார். காதல் மதி பாடல்கள் எழுத, டேனியல் – சந்தோஷ் படத் தொகுப்பு செய்கிறார். சந்திரமோகன் கலையை நிர்மாணிக்க, ஸ்டார் விஜய் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். சாய் பாரதி நடனம் அமைக்க, மக்கள் தொடர்பாளர்களாக சுரேஷ் சுகு – தர்மதுரை பணியாற்றுகிறார்கள்.

சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் பி.எம்.ரவிநாயக் இயக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பேண்டஸி திரைப்படங்களின் வருகை மிக மிக அரிதாகி வரும் நிலையில், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் ஆன்மீக பேண்டஸி திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

பேண்டஸி ஜானர் திரைப்படமாக இருந்தாலும், இப்படத்தின் கதைக்களம் சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசுகிறது.

தற்போது ’மாயமுகி’ படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Our Score