இசைஞானி இளையராஜாவின் ரசிகர் மன்றம், முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
நம்முடைய இசைஞானி அவர்களின் ஆயிரம் படங்களின் தகவல்களை திரட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு பிரமாண்டமான தகவல் களஞ்சியம் தயார் செய்வதுதான் இசைஞானி இளையராஜா ரசிகர் மன்றத்தின் நோக்கம்.
இந்த தகவல்களை ரசிகர்களும் கொடுக்கலாம். அதாவது ராஜா சாரின் முதல் படத்திலிருந்து ஆயிரமாவது படமான பாலா அவர்களின் ‘தாரை தப்பட்டை’வரையிலான தகவல்களை தர வேண்டும்,
இதில் ஒரு படத்தின் பெயர், வெளியான தேதி, இயக்குனர், கம்பெனி பெயர், பாடலாசியர்கள், பாடகர்கள் என்று எல்லா தகவல்களும் இருக்க வேண்டும்.
அப்படி ஆயிரம் படங்களின் தகவல்களை கொடுக்கும் ரசிகருக்கு இசைஞானியின் கையால் பரிசு வாங்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
அந்த பாட்டுத் தலைவன் கையால் பரிசு வாங்கப் போகும் அதிர்ஷ்டசாலி நீங்களாககூட இருக்கலாம்.. முயற்சி செய்யுங்கள்..!
மேலும் தகவல்களுக்கு…
இசைஞானி இளையராஜா ரசிகர்கள் மன்றம்
எண், 10, நாவலர் நெடும்பாதை
தேவராஜ் நகர்
சாலிகிராமம்
சென்னை-600 093
தொலைபேசி எண் 044 – 43331050
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.