“விஜய் டிவியில் பப்லுவுடன் நடந்த சண்டை நிஜமானதுதான்..!” – நடிகர் சிம்பு பேட்டி..

“விஜய் டிவியில் பப்லுவுடன் நடந்த சண்டை நிஜமானதுதான்..!” – நடிகர் சிம்பு பேட்டி..

7 வருடங்களுக்கு முன்பாக, 2007-ம் வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் சீசன் 1′ தொடரில் நடிகர் பப்லு என்னும் பிருத்விராஜும் கலந்து கொண்டு நடனமாடினார்.

அந்த ஷோவில் ஒரு நாள், போட்டியின் நடுவராக அமர்ந்திருந்த நடிகர் சிம்புவுக்கும், பப்லுவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ‘பப்லு சரியாக நடனமாடவில்லை’ என்று சிம்பு சொல்ல.. ‘நான் சரியாகத்தான் ஆடினேன்’ என்று நடிகர் பப்லு கூறினார். இருவருக்குமிடையில் வாக்குவாதம் வளர்ந்து அது பெரிய அளவிலான வாதமாகி.. சிம்பு பட்டென்று “நான் இனிமேல் இங்கே வர மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு எழுந்து அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.

தமிழ்நாடே அடுத்த இரண்டு நாட்களுக்கு இதைத்தான் சொல்லிச் சொல்லி மாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் “இது அனைத்துமே பக்கவாக பிளான் செய்து நடித்த நடிப்புதான். உண்மையில்லை” என்று அந்த மேடை நாடகத்தில் நடித்த நடிகர் பப்லுவே சென்ற மாதம் ‘குமுதம்’ பத்திரிகைக்கு அளித்திருக்கும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

பப்லுவின் இந்த பேட்டி குறித்து நடிகர் சிம்புவிடம் கேட்டபோது, “பப்லு வேணும்ணா பேசி வைச்சு இதைப் பண்ணியிருக்கலாம். அவர்கிட்ட பேசி, ‘இந்த மாதிரி சொல்லு’ அப்படினு யாராச்சும் சொன்னாங்களான்னு எனக்கு தெரியாது. அது அவரோட பெர்சனல். என்கிட்ட தொலைக்காட்சி தரப்பில் இருந்து அந்த மாதிரி எதுவுமே சொல்லவில்லை. அந்தத் தொலைக்காட்சி நிறுவனம், ‘இந்த மாதிரி நடந்திருச்சே… அதை போடட்டுமா?’ அப்படின்னு என்கிட்ட கேட்டுட்டுத்தான் அந்த எபிசோடை ஒளிபரப்பினாங்க. என்னோட கோபம் நிஜம். பப்லு ஏதாவது காமெடியாக சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார் சிம்பு.

இனி உண்மையை சொல்ல வேண்டியது விஜய் டிவி மட்டுமே..!

Our Score