வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதிவரையிலும் கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேசத் திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 7 மலையாள திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.
வருடந்தோறும் நடைபெறும் இத்திரைப்பட விழாவில் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட படங்களில் சிறந்தவைகள் தேர்வு செய்யப்பட்டு இந்தியன் பனோரமா என்கிற பிரிவில் திரையிடப்படும்.
இந்தப் பிரிவில் திரையிடுவதற்காக 7 மலையாள திரைப்படங்கள் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மம்முட்டியின் நடிப்பில் ஒளிப்பதிவாளர் வேணு இயக்கிய ‘முன்னறியிப்பு’, துல்கர் சல்மான் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய ‘ஜான்’, மோகன்லாலில் சூப்பர்ஹிட் படமான ‘திருஷ்யம்’, நிவின் பாலி நடிப்பில் அப்ரிட் ஷைன் இயக்கிய ‘1983’, ஷாஜி என்.கருண் இயக்கிய ‘ஸ்வப்னம்’, ராஜீவ் ரவி இயக்கிய ‘Njaan Steve Lopez’ அணில் ராதாகிருஷ்ணா மேனன் இயக்கிய ‘North 24 Kaatham’ ஆகிய படங்களே தேர்வு செய்யப்பட்டவையாகும்.
தமிழ் மொழியில் இயக்குநர் பிரம்மா இயக்கிய ‘குற்றம் கடிதல்’ மட்டுமே தேர்வாகியிருப்பதாகத் தகவல்..!
மலையாளத்துக்காரங்களை இந்த விஷயத்துல மட்டும் அடிச்சுக்கவே முடியலை..!