full screen background image

மார்ச் 20-ல் வெளியாகிறது ‘இரவும் பகலும் வரும்’ திரைப்படம்

மார்ச் 20-ல் வெளியாகிறது ‘இரவும் பகலும் வரும்’ திரைப்படம்

ஸ்கை டாட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரித்திருக்கும் படம் ‘இரவும் பகலும் வரும்’. RSSS Pictures  நிறுவனத்தின் சார்பில் எஸ். தணிகைவேல் இப்படத்தை வெளியிடுகிறார்.

இந்தப் படத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் மற்றும் அனன்யா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். மேலும் வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு ஜெகன், சாமிநாதன் என பலர் நடித்துள்ளனர். இசை – தீனா, ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி. படத்தொகுப்பு – வி.டி.விஜயன்.  ஏ.வெங்கடேஷிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாலா ஸ்ரீராம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நன்முறையில் நடந்து கொள்ளும் நற்பண்புகளை கொண்டவன். காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடனானான்? எதற்காக திருடுகிறான் என்பதே இந்த ‘இரவும் பகலும் வரும்’ படத்தின் கதை.

இந்தப் படம் சென்ற மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டியது. கடைசி நிமிடத்தில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கோர்ட்டில் தடையுத்தரவு பெற்றதால் திரையிடாமல் நின்று போனது. இப்போது கோர்ட் பிரச்சினை தீர்க்கப்பட்டு தடையுத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், வரும் மார்ச் 20-ம் தேதியன்று இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.

Our Score