நட்சத்திரப் பட்டாளமே கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’..!

நட்சத்திரப் பட்டாளமே கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’..!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'இஞ்சி இடுப்பழகி' ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா  சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடையைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக  இருந்தாலும், தயாரிப்பு நிறுவனமான பி.வி.பி. சினிமா இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுஷ்காவை  போலவே 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படமும்  தன்னுடைய  எடையைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.

ஆர்யா, அனுஷ்கா, ஊர்வசி, பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் இப்போது கௌரவ வேடத்தில் நாகார்ஜுன், ஜீவா, பாபி சிம்ஹா, ராணா ஆகியோருடன் ஹன்சிகா, தமன்னா, ஸ்ரீதிவ்யா, ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜீவாவும், ஹன்சிகாவும் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், பாபி  சிம்ஹாவும், ஸ்ரீதிவ்யாவும் ஆர்யாவுடன் 'பெங்களூரு டேய்ஸ்' ரீமேக் படத்தில் இணைந்து நடிப்பவர்கள் என்பதாலும், மறுப்பேதும் இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டனர்.

'இஞ்சி இடுப்பழகி'  படத்தின் மையக் கருத்தே அழகு என்பது  உடல் அமைப்பிலோ, தோற்றப் பொலிவிலோ இருப்பதல்ல. நம்முள் இருக்கும் நல்ல எண்ணம்தான் உண்மையான் அழகு  என்பதுதான். இந்தக் கருத்தை  ஆமோதிக்கும் காஜல்  அகர்வாலும், தமன்னாவும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிக்கக் கேட்டவுடன் உடனேயே  நடிக்க ஒப்புக் கொண்டனர்.

அழகாக இருப்பதற்கு, இயற்கையான முறைகளே போதும், செயற்கை சாதனங்கள்  வேண்டாம் என்கிற  காரணத்தை வலியுறுத்தும் ரேவதியும் இந்தப் படத்தில் நடிக்கிறார். பி.வி.பி. நிறுவனத்தாருக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே நல்ல தொடர்ப்பு இருந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று.

 பெண்கள் இடையே என்றும் பிரபலமாக இருக்கும் ஆர்யாவும்  சமீபத்திய பிரம்மாண்ட வெற்றிகளால் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க படும் அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் பழம் பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் கே எஸ் பிரகாஷ் ராவ்.

மரகதமணியின்  இசையில், மதன் கார்க்கியின்  வரிகளில் வெளி வந்த 'இஞ்சி இடுப்பழகி' பாடல்களும், முன்னோட்டமும் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து உள்ளது.

பல்வேறு தரப்பினரை கவரவிருக்கும் 'இஞ்சி இடுப்பழகி' இந்த மாதம் 27-ம் தேதி தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது.