full screen background image

“சிவாஜி-மேஜர் காலத்து சங்கம் மாதிரி நடத்தணும்…” – நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை..!

“சிவாஜி-மேஜர் காலத்து சங்கம் மாதிரி நடத்தணும்…” – நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று காலை தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயல்லிதாவை கோட்டையில் சந்தித்து பேசினார்கள்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்களான பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர்.

actors-cm

இந்தச்  சந்திப்பு முடிந்த பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், “இன்று எங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான நாள். புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளான நாங்கள் அனைவரும் முதல்வர் அம்மாவை சந்தித்தோம். நிறைய புன்சிரிப்போடு ஒரு வி.ஐ.பி.யை உபசரிக்குற மாதிரி எங்களை வரவேற்று உட்கார வைத்து ரொம்ப சந்தோஷமா பேசினாங்க.

முந்தைய நாட்களில் நடிகர் சங்கத்தின் தலைவராக சிவாஜிகணேசனும், செயலாளராக மேஜர் சுந்தர்ராஜனும் இருந்த காலக்கட்டம் நடிகர் சங்கத்திற்கே பொன்னான காலக்கட்டம். அந்தக் காலக்கட்டதை திரும்பவும் கொண்டு வரணும்னு அவங்க ஆசைப்பட்டாங்க. அவங்களோட இந்த நம்பிக்கையே எங்களுக்கு இன்னும் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கு. சங்கத்தை பத்தி நிறைய விஷயம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாங்க.  

தம்பி விஷாலும், ‘நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நீங்களும் கலந்துக்கணும்’னு அம்மாவை கேட்டாரு. அம்மாவும் ‘முன்னாடியே தேதியைச் சொல்லுங்க.. கண்டிப்பா வந்தர்றேன்’னு சொல்லிட்டாங்க..” என்றார்.

அம்மா ஒரு தடவை சொன்னால், ஆயிரம் தடவை சொன்ன மாதிரி..!

கண்டிப்பா செஞ்சிருவாங்கம்மா..! 

Our Score