‘இஞ்சி இடுப்பழகி’க்காக 20 கிலோ எடையை கூட்டியும், குறைத்தும் நடித்த அனுஷ்கா..

‘இஞ்சி இடுப்பழகி’க்காக 20 கிலோ எடையை கூட்டியும், குறைத்தும் நடித்த அனுஷ்கா..

‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து அனுஷ்காவின் பட வரிசை பெருகி வருகிறது. ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி'  படம் அனுஷ்காவின் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்ததை தொடர்ந்து இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

??????????????????????????????????????????????????????????????????

எடை குறைப்பு பற்றிய கதையான இந்த  'இஞ்சி இடுப்பழகி' படத்தில் அனுஷ்கா இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். ஒரு கேரக்டருக்காக அனுஷ்கா 20 கிலோ எடை அதிகரித்த தோற்றத்தில் வருகிறார். அதற்கு பிறகு ஆர்யா கொடுக்கும் சில டிப்ஸ்கள்  மூலமாக எடையை குறைத்து ஸ்லிம் அனுஷ்காவாகவும் நடித்திருக்கிறார்.

anuskha-5

இந்த எடை அதிகரித்த தோற்றத்துடன் சமீபத்தில் அனுஷ்கா ஹைதராபாத்தில் நடைபெற்ற பாகுபலி படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா இந்தப் படத்தில் ஒரு உடற்பயிற்சி நிபுணராக தோன்றுகிறார். சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில்  ஆர்யா பங்கேற்று வெற்றி பெற்ற சர்வதேச  சைக்கிள் போட்டி பற்றியும் சில காட்சிகள் இப்படத்தில் இடம் பெறவுள்ளன.

ஆர்யா-அனுஷ்கா ஜோடியின்  சமீபத்திய பெரும் வெற்றி இந்த ஜோடியின் மீதும் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு உள்ள ஆர்வத்தைக் கூட்டியிருக்கிறது.