full screen background image

யூடியூபை கலக்கும் இசைஞானி-பாலாவின் கூட்டணி இசை..!

யூடியூபை கலக்கும் இசைஞானி-பாலாவின் கூட்டணி இசை..!

சென்ற மாதம் 3 நாட்கள் அப்பலோ மருத்துவமனையில் இருந்த நேரத்தில்தான் இசைஞானியின் அருமையும், பெருமையும் நமது இசை ரசிகர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது.. எங்கே ராசா. எங்கே ராசா என்று நிமிடத்திற்கொரு முறை தேடுதல் வேட்டை நடத்தியதால்.. மருத்துவமனையில் இருந்தபடியே தனது ரசிகர்களுக்காக தனது உடல் நலம் பற்றி வீடியோவில் பேசி வெளியிட்டுத்தான் ரசிகர்களின் பதற்றத்தைக் குறைத்தார் இசைஞானி.. 

ராசா மீண்டும் தனது ராசாங்கத்தை துவக்கிவிட்டார் என்பது தெரிந்ததும் நெஞ்சுக்கு நிம்மதியாக அமைதியானார்கள் ரசிகர்கள்.. இந்த வருடத்தின் துவக்கத்திலேயே இயக்குநர் பாலாவின் அடுத்த படத்திற்கு ராசாதான் இசையமைக்கப் போகிறார் என்கிற ஹாட்டான செய்தி கிடைத்தது அவரது ரசிகர்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது..!

எப்போதும் தனிமை விரும்பயான பாலாவே இந்த முறை தனது அடுத்தப் படத்தின் பிரமோஷன் வேலைகளை பார்க்கத் துவங்கிவிட்டது ஆச்சரியமானதுதான்..! ராசாவின் இசையமைப்பு வேலைகளையே ஷூட் செய்து இதனையே தனது படத்தின் முதல் பிரமோஷனாக பயன்படுத்தியிருக்கிறார் பாலா..

ராசாவின் கையசைவில் இசைக்கப்படும் நாட்டுப்புற இசையை கலந்து கட்டியடித்திருக்கும் இந்த பிரமோஷன் வீடியோதான் இப்போதைக்கு யூடியூபில் ஹாட்டான வீடியோ.. 6 நாட்களில் 12 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறாராம் ராசா.. இது ரொம்ப கம்மி என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.. ‘சின்னத்தம்பி’ படத்தின் அனைத்து பாடல்களுக்கும் 50 நிமிடங்களில் மெட்டமைத்து சாதனை படைத்தவராச்சே நம்ம ராசா என்கிறார்கள் இசைஞானியின் உயிர் ரசிகர்கள்..!

உங்களை திருப்திப்படுத்துறது கஷ்டமப்பா..!

 

Our Score



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *