full screen background image

சாந்தினி நடிக்கும் ‘ஐல’ என்கிற ‘ஐஸ்வர்ய லட்சுமி’..! 

சாந்தினி நடிக்கும் ‘ஐல’ என்கிற ‘ஐஸ்வர்ய லட்சுமி’..! 

ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஐல’ என்கிற ‘ஐஸ்வர்ய லட்சுமி’. 

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தம்பி உன்னி கிருஷ்ணன்  பிரான்ஸ் நாட்டு  குடியுரிமை பெற்றவர். ஜே.ரவீந்திரன்  சுவிஸ் நாட்டு  குடியுரிமை பெற்றவர். 

தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி, ரேவதி, சிவக்குமார் மற்றும் முன்னனி  நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படங்களை தயாரித்தவர். 

தற்சமயம்  இருவரும் பிரான்ஸ், சுவிஸ்  & இந்தியாவில் Resort and Restaurant  நடத்தி வருகிறார்கள்.

chandini

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். ‘எமன்’ படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் ‘போராளி’ திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ஒளிப்பதிவு – ஹேமந்த், இசை டி..ஆர்.கிருஷ்ண சேத்தன், படத் தொகுப்பு – டி.ஆர்.பிரவீண், கலை இயக்கம் – ஆனந்த் மணி, எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன், இயக்கம் – டி.ஆர்.சுரேஷ். 

தமிழ்ச் சினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.. மினிமம் கியாரண்டி வசூலையும், வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத் தருவதால் அறிமுக இயக்குநர்கள்கூட ஹாரர் பக்கமே தங்களது கவனத்தை திருப்புகின்றனர். அத்தகைய ஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது.

IMG_2519

இப்படத்தின் பூஜை நிகழ்வு நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் சொந்த Resort ஆன Tun L Hotel House Boat Resort-ல் தமிழக காவல்துறை உயரதிகாரியான ராஜேஷ் தாஸ்  I.P.S. குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

விரைவில்  இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Our Score