full screen background image

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் மே 11-ம் தேதி வெளியாகிறது..!

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் மே 11-ம் தேதி வெளியாகிறது..!

அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்தின் வெளியீடு  மே 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனத்தின் தயாரி்பபில் இயக்குநர்  சித்திக்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’  படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.

இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோருடன் மிரட்டலான ஒரு வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானியும்  நடித்துள்ளார்.

இயக்கம் – சித்திக், வசனம் – ரமேஷ் கண்ணா, இசை – அம்ரேஷ், ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன், படத் தொகுப்பு – கே.ஆர்.கௌரி சங்கர், புரொடக்ஷன் டிசைன் – மணி சுசித்ரா, கலை இயக்கம் – ஜோசப் நெல்லிகன், சண்டை பயிற்சி – பெப்சி விஜயன், நடன இயக்கம் – பிருந்தா, நிர்வாக தயாரிப்பு – விமல்.ஜி, தயாரிப்பு – எம்.ஹர்சினி.

‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமையை பெற்றுள்ளது. முன்னதாக இத்திரைப்படம் இந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருந்தது. தற்போது  இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு உள்ளது.

நிறைய பொருட் செலவில் தயாரித்து பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ என்ற ஆங்கில திரைப்படம்  ஆங்கிலம்  மற்றும் இந்திய மொழிகளில் வரும் ஏப்ரல் 27-ம் தேதியன்று இந்தியா முழுவதும் வெளிகிறது. இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட  ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் திரையரங்குகளின்  பற்றாக்குறையின் காரணமாகவும், எல்லா  பகுதி மக்களும் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் இப்படத்தினை  மே மாதம் 11-ம்  தேதியன்று வெளியிடுவதாக  படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Our Score