நடிகர் நரேனின் பிறந்த நாளுக்கு நடிகர் கார்த்தி கொடுத்த வித்தியாசமான பரிசு..!

நடிகர் நரேனின் பிறந்த நாளுக்கு நடிகர் கார்த்தி கொடுத்த வித்தியாசமான பரிசு..!

நடிகர் நரேன் நடித்து வரும் ‘குரல்’ படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அவருடைய பிறந்த நாளான நேற்று நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.  இந்த ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் துவங்கி, அஞ்சாதே’, ‘கைதி’ என இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்களில் ஏதேனும் ஒரு வித்தியாசம் காட்டுவதே இவர், தற்போதுவரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க காரணம் என்றும் கூறலாம்.

நல்ல கதைகளில் நடிக்க கவனமாக இருக்கும் நரேன் தற்போது பிரபல மலையாள இயக்குநரான சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குநர் சுகீத் இயக்கும் முதல் தமிழ் படம் இது. இந்தப் படத்தில் நாயகியாக ஷ்ரத்தா சிவதாஸ் நடிக்கிறார்.  இவர் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்தவர்.

மேலும் முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் என்ற நடிகையும் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்றுவரும் வேளையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று நரேனின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கார்த்தியால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசமான போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

Our Score