‘ஐ’ திரைப்படம் சென்சார் ரீவைஸிங் கமிட்டியில் அப்பீல்..!

‘ஐ’ திரைப்படம் சென்சார் ரீவைஸிங் கமிட்டியில்  அப்பீல்..!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சர்டிபிகேட் தந்திருக்கிறார்கள்.

வரும் ஜனவரி 9-ம் தேதி ‘ஐ’ படம் ரிலீஸ் என்று உறுதியாகச் சொல்லப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு ‘ஐ’ படத்தின் முதல் டிரெயிலரும் வெளியானது..

நேற்றுதான் ‘ஐ’ படம் சென்சார் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். படம் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் இதற்கு ‘U/A’ சர்டிபிகேட்டுதான் கொடுக்க முடியும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம்.

‘யு’ சர்டிபிகேட் இருந்தால் மட்டுமே வரிவிலக்கு கோர முடியும் என்பதால் மீண்டும் ரீவைஸிங் கமிட்டிக்கு ‘ஐ’ படத்தை அனுப்பியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது..!

Our Score