தன்னை 4 கோடி ரூபாய் அளவுக்குக் கடனாளியாக்கிவிட்டான் என்று ஒரு இயக்குநரை கடுமையாகத் திட்டுகிறார் நடிகர் ‘கஞ்சா’ கருப்பு.
நடிகர் ‘கஞ்சா’ கருப்பு இயக்குநர் பாலாவால் ‘பிதாமகன்’ படத்தில் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பிறகு ‘பருத்தி வீரன்’ படத்தில் இயக்குநர் அமீரால் பிரபலப்படுத்தப்பட்டார்.
சுமார் 50 படங்களில் நடித்து முடித்திருந்த நிலையில் ‘கஞ்சா’ கருப்பு திடீரென்று ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற திரைப்படத்தை சொந்தமாகத் தயாரித்து வெளியிட்டார். படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.
இந்தப் படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ‘கஞ்சா’ கருப்பு பேசும்போது, “அந்தப் படம் பத்தியே நான் வெளில பேசுறதில்லை. நல்லாயிருந்த நான் அந்தப் படத்தாலதான் நடுத்தெருவுக்கு வந்தேன்.
படுக்குறதுக்கு இடமில்லைன்னு வந்தவன் அந்த இயக்குநர் கோபி. நிஜமா அவனை ‘இயக்குநர் கோபி’ன்னு சொல்லக் கூடாது. ‘சோத்து மூட்டை கோபி’ன்னுதான் சொல்ல வேண்டும். அவனுக்கு மூளையே கிடையாது. அவன் ஒரு வீணாப் போனவன்..
அவன் தங்குறதுக்கு என் ஆபீஸ்ல இடம் கொடுத்ததுதான் நான் செஞ்ச ஒரே தப்பு. அப்புறம்.. என்னவெல்லாமோ நடந்து போச்சு. என்னை மயக்கி எப்படியோ படத்தைத் தயாரிக்க வைச்சான். மொத்தமா 4 கோடி போச்சு.. நான் நடுத்தெருவுக்கு வந்துட்டேன்.
அப்புறம் மேல் என்கிட்ட இருந்த வீ்ட்டை வித்து.. காரை வித்து.. ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன்..” என்று வருத்தத்துடன் சொன்னார்.