full screen background image

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபு தேவாவின் ‘ரேக்ளா’ திரைப்படம்

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபு தேவாவின் ‘ரேக்ளா’ திரைப்படம்

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படம் ‘ரேக்ளா.’

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். ‘வால்டர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

படத்தில் பணியாற்ற இருக்கும் மற்றைய நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா இன்று தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகவிருக்கும் இந்த ‘ரேக்ளா’ படத்தின் டைட்டில் லுக், இணையவாசிகளிடமும், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Our Score