பெல்லி டான்ஸ் தரிசனம் நமக்கு எப்போ..?

பெல்லி டான்ஸ் தரிசனம் நமக்கு எப்போ..?

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பு திரையுலகினரை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வார கடைசியில் வெளியாகி, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி , திங்கட்கிழமை 80% திரை அரங்கு நிறைவது படக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துயுள்ளது.

கதாநாயகி ஆஷ்னா ஜாவேரியின் அலைபேசிக்கு வரும் குறுந்தகவல்களும், அழைப்பும் படத்தை பற்றியும் அவரையும் புகழ்ந்துதான் வருகிறது. படத்தின் குளோஸப் காட்சிகளில் ஆரம்ப கால உலக அழகி ஐஸ்வர்யாராயை அப்படியே நினைவுபடுத்துகிறார் ஆஷ்னா. அந்த அளவுக்கு முக ஒற்றுமை.. நடிப்பு ஒற்றுமையா என்பது போகப் போகத் தெரியும்..! விளம்பர துறையில் ஆர்வமுள்ள ஆஷ்னா பணியாற்றிய ஒரு முக்கிய விளம்பரப் படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடனும் நடித்திருக்கிறார். ஷாருக்கை பற்றி பேசினாலே துள்ளி குதிக்கும் ஆஷ்னா, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ கதாநாயகன் சந்தானத்தை பற்றி பேசும் போது இன்னமும் உற்சாகமாகிறார்.

“சந்தானம் ஸாரின் timing sense பிரமிப்புக்குரியது. படப்பிடிப்பில் அவர் காட்டும் தொழில் சிரத்தைதான், அவருடைய வெற்றிக்கு மிக முக்கிய காரணம்னு சொல்லுவேன். நான் சினிமாவில் நடிக்க வருவேன் என்பதையோ, அதிலும் தமிழ் சினிமாவில் நடிக்க வருவேன் என்பதையோ என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. தமிழ் ரசிகர்கள் எப்பவுமே திறமையான புதுமுகங்களை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்பதும் தெரியும். இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் என்றென்றும் அடிமை. என்னுடைய எதிர்கால படங்கள் ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் வெற்றிக்கு மரியாதையை செய்வது போல்தான் இருக்கும். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் பி.வி.பி. நிறுவனம், இயக்குனர் ஸ்ரீநாத், மற்றும் சந்தானம் ஆகியோருக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இப்போது ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பட குழுவினரோடு தமிழகம் எங்கும் திரை அரங்குகளில் ரசிகர்களோடு படம் பார்க்க உள்ளேன். ரசிகர்களை நேரில் சந்திக்கப் போவதை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்கிறார்.

ஆஷ்னா பற்றிய இன்னொரு ரகசியச் செய்தி.. இவர் பெல்லி டான்ஸை முறைப்படி கற்றுக் கொண்டவராம். இது போதுமே..? எப்படியும் ஏதாவது ஒரு தெலுங்கு படத்திலாவது இந்த ஆஷ்னா ஜாவேரியின் பெல்லி டான்ஸின் தரிசனம் நமக்கு நிச்சயம் கிடைக்கும்..

Our Score