செல்போனில் குடியிருக்கும் பேயின் கதை – ஹலோ நான் பேய் பேசுறேன்..!

செல்போனில் குடியிருக்கும் பேயின் கதை – ஹலோ நான் பேய் பேசுறேன்..!

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி ‘கிரி’, ‘ரெண்டு’, ‘கலகலப்பு’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்திருக்கும் புதிய படம் ‘ஹலோ… நான் பேய் பேசுறேன்’.

இதில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன், V.T.V கணேஷ், மதுமிதா, சிங்கம் புலி, யோகி பாபு,  சிங்கப்பூர் தீபன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

கலை இயக்கம் – குரு ராஜ், நடனம் சிவராக் சங்கர். சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், ஹரி தினேஷ். தயாரிப்பு மேற்பார்வை – K. மோகன். நிர்வாக தயாரிப்பு A.அன்பு ராஜா. இசை – சித்தார்த் விபின். பாடல்கள்  மோகன் ராஜன், பிரபா, S.பாஸ்கர், படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த் N.B., ஒளிப்பதிவு – N. பானுமுருகன். தயாரிப்பு சுந்தர்.C., இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் S. பாஸ்கர். இவர் ‘நாளைய இயக்குநர்’ தொடரில் பல குறும் படங்களை இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், “இது திகில் கலந்த கூடிய ஒரு காமெடி பேய்ப் படம். இது மற்ற காமெடி பேய் படங்களிலிருந்து மாறுபட்ட திரைப்படமாக இருக்கும்.

ஒரு செல்ஃபோனில் இருந்து கிளம்பும் பேயை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த செல்ஃபோன் யார் யாரிடத்தில் பயணிக்கிறது, .?அவர்களை அந்தப் பேய் என்ன பாடுபடுத்துகிறது,.? அதனால் அவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது… என்பதை திகில் கலந்த காமெடியுடன் சொல்லியிருக்கிறோம்.

இந்தக் கதையை இயக்குனர் சுந்தர்.C-யிடம் சொன்னவுடன் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. படத்திற்கான வேலைகளை உடனே துவக்கச் சொல்லிவிட்டார். இத்திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்த மாத இறுதியில் ‘ஹலோ… நான் பேய் பேசுறேன்’ படத்தை திரையிட திட்டமிட்டுள்ளோம்..” என்றார்.

Our Score