full screen background image

ஆரா பிக்சர்ஸ் வெளியிடவிருக்கும் ‘அஞ்சல’ திரைப்படம்..!

ஆரா பிக்சர்ஸ் வெளியிடவிருக்கும் ‘அஞ்சல’ திரைப்படம்..!

தமிழ்த் திரையுலகில் வளர்ந்துவரும் விநியோக நிறுவனமான ‘ஆரா பிக்சர்ஸ்’ நிறுவனத்தினர், விமல், நந்திதா, பசுபதி ஆகியோர் நடிக்க, புதிய இயக்குநரான தங்கம் சரவணனின்  இயக்கத்தில், பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அஞ்சல’  திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ‘first copy pictures’ என்னும் நிறுவனத்துடன் இணைந்து  பெற்றுள்ளனர். 

IMG_1410 3

சமீபத்தில் தயாராகி வெளியீட்டுக்கு வரிசையில் நிற்கும் படங்களில் முக்கியமான படமாக கருதப்படும் படமான ‘அஞ்சல’,  இந்த வருடத்தின் இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டீ  கடைகள் நமது வாழ்வில் இன்றி அமையாததாக இருக்கிறது, நமது சமுதாய, பொருளாதாரம், அரசியல் எல்லாவற்றிலும் டீ கடைகள்தான் பிரதானமாக அங்கம் வகிக்கின்றன. அப்பேர்ப்பட்ட ஒரு டீ  கடைக்கும், ஒரு ஊருக்கும் உள்ள உறவை ஜனரஞ்சகமாக, மிகவும் யதார்த்தத்துடன் சொல்லப்பட்டிருக்கும் படம்தான் இந்த ‘அஞ்சல’ திரைப்படம்.

DSC_2685 3

“இந்த  வித்தியாசமான சிந்தனையே இந்த படத்தின் மேல் எங்களது ஆர்வத்தை தூண்டிவிட்டது. எல்லா தரப்பு மக்களையும் எளிதில் சென்றடையும் படமாக ‘அஞ்சல’ இருக்கும். எங்களது நிறுவனமான ‘ஆரா சினிமா’ நிறுவனம் மூலமாக  நாங்கள் பல்வேறு தரப்பட்ட படங்களையும் மக்களுக்கு வழங்க நினைத்திருக்கிறோம். தரமான படங்கள் எங்கள் நிறுவனத்தின் முகவரியாக இருக்கும். இந்த ‘அஞ்சல’ படமும் அந்த தரமான வரிசையில் ஒன்றாக இருக்கும் என்பதில் என்பதில் இரண்டாவது கருத்தே இல்லை…” என்று உறுதியோடு  கூறுகிறார் ‘ஆரா பிக்சர்ஸ்’ நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ்.

Our Score