பழைய மேனேஜர்கூட ஏதாவது பகையோ என்னவோ தெரியவில்லை.. கோடம்பாக்கத்தின் ‘டார்லிங் டம்பக்கு’ ஹன்சிகா மோத்வானி இன்றைக்கு ஒரு எச்சரிக்கை கடிதத்தை திரையுலகத்திற்குள் தட்டிவிட்டிருக்கிறார்..!
Dear All,
அம்மா.. அம்மா்… தன் அம்மாவைத் தவிர வேறு யாரையும் எதற்கும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் ஹன்ஸு..
திரையுலகில் பரவலாக இருந்து வரும் கால்ஷீட் கை மாற்றலில் உள்ள புரோக்கர் தொழிலில் ஏதாவது பிரச்சினை வந்திருக்கும் என்று நினைக்கிறோம்..! குறிப்பிட்ட நபர் என்று ஒருவரை பெயர் குறிப்பிடாமல் சொல்லியிருக்கிறார்.. யார் அது என்று விசாரிக்க கோடம்பாக்கத்திற்கே வேலை கொடுத்திருக்கிறார். இரண்டு நாட்கள் பொழுது நல்லா போகும்..!
இங்கேயிருக்கும் நடிகைகளைவிடவும், வடக்கத்திய நடிகைகள்தான் பண விஷயத்தில் கெட்டியாக இருக்கிறார்கள். இந்தப் பொண்ணு பொழைச்சுக்கும்..!









