மும்பையில் ஒரு சமூக அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற ரத்ததான முகாமில் நடிகை அசின் கலந்து கொண்டார்.
அப்போது ரத்த தானம் செய்தவர் கூடவே தன்னுடைய கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்யவும் முன் வந்தார். அதற்கான உறுதி மொழி பத்திரத்திலும் அவர் கையெழுத்திட்டார்.
இது பற்றி அசின் பேசும்போது, “என் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் ரொம்ப நாளாகவே இருந்தது. இப்போதுதான் அதனை நடைமுறைப்படுத்தியிருக்கிறேன். தேவையானவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக, என் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முடிவுக்கு வந்தேன். என் நடவடிக்கைகள், மற்றவர்களையும் இதுபோல் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்…’’ என்றார்.
ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு நடிகை திரிஷாவும் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அறிவி்ததார் என்பது குறிப்பிடத்தக்கது..!
அசினும், திரிஷாவுமே கொடுத்தாச்சு.. நாம கொடுத்தால்தான் என்ன…?