‘Hair Is Falling’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ‘சொட்ட’ என்று ரீமேக் ஆகிறது..!

‘Hair Is Falling’ ஹிந்தி திரைப்படம் தமிழில் ‘சொட்ட’ என்று ரீமேக் ஆகிறது..!

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை எடுத்து கின்னஸ் உலக சாதனைப் படத்தை இயக்கியவர் இயக்குநர் இசாக்.

மேலும் இவர் நடிகர் ‘நெடுஞ்சாலை’ ஆரியை வைத்து ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இவர் தற்பொழுது ‘சொட்ட’ என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை மேன்டியோ பிலிம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் மூலம் ஜெமினி ரெய்கர் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் பிரபல நடிகர், நடிகையர் பலரும் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

இசை - ஜெ.ஷமீல், ஒளிப்பதிவு - மு. ரத்தீஷ்கண்ணா, படத் தொகுப்பு - எஸ்.தேவராஜ், கலை இயக்குனர் - பூங்கா கிருஷ்ணமூர்த்தி, சண்டை இயக்கம் - E.கோட்டி, நடன இயக்கம் - ஜானி, பாம்பே பாஸ்கர், நிர்வாகத் தயாரிப்பு - அபிலாஷ், மக்கள் தொடர்பு - வின்சன் C.M, பாடல்கள் - வேல்முருகன், அ.ப.ராசா, ஜெகன் சேட்

இத்திரைப்படம் ஹிந்தியில் ‘ஹேர் இஸ் பாலிங்’ என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இளம் வயதிலேயே தலைமுடி உதிரும் இளைஞன் ஒருவன் தன் வாழ்வில் காதல், தொழில், திருமணம் என அனைத்திலும் அடுக்கடுக்காக தோல்வி அடைகிறான். மீண்டும் அதே இளைஞன் எப்படி தனது வழுக்கை தலையுடன் தன் காதல், தொழில், திருமணத்தில் வெற்றி பெறுகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் கதைதான் இந்த ‘சொட்ட’ திரைப்படம்.

இத்திரைப்படத்தின் முதல் போஸ்டரை நடிகர் ஆர்யா இன்றைக்கு வெளியிட்டார்.