சூர்யா, அமலாபால் நடிப்பில் சூர்யாவின் 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘ஹைக்கூ’ படத்தின் பெயர் திடீரென ‘பசங்க-2’ என்று மாற்றப்பட்டுள்ளது.
சூர்யா தனது சொந்த நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
இதில் சூர்யாவும், அமலாபாலும், சில சிறுவர், சிறுமியர்களும் நடித்துள்ளனர். ‘பசங்க’ படம் போலவே சிறுவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாம்.
பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பினை மேற்கொண்டுள்ளார். பாடல்களை நா.முத்துக்குமார், யுகபாரதி, மதன் கார்க்கி எழுதியிருக்கின்றனர். எழுதி, இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். படத்தினை கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிடவுள்ளது.
ஹைக்கூ என்கிற பெயரை வைத்துக் கொண்டு வரிவிலக்குக் கேட்க முடியாது என்கிற காரணத்தினால் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பாக இதனை வெளிப்படையாகத் தெரியப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜ், தகுந்த, பொருத்தமான பெயரைச் சொல்பவர்களுக்கு பரிசளிப்பதாகவும் தெரிவித்தார்.
கடைசியாக இப்போது பசங்க-2 என்றே படத்திற்கு தலைப்பு சூட்டியிருக்கிறார்கள். இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது..!