சூடு பிடித்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்..!

சூடு பிடித்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 2015-2017-ம் ஆண்டுக்குரிய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருக்கிறது.

இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், ஹென்றி, மன்சூர் அலிகான், ‘கெட்டப்’ பி.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

al-alagappan-team-1 thanu team

2 துணைத் தலைவர்களின் பதவிக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். இதில் தாணு அணியின் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் மற்றும் பி.எல்.தேனப்பனும், ஏ.எல்.அழகப்பன் அணியில் ஜிகர்தண்டா தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனும், கே.ராஜனும் போட்டியிடுகின்றனர்.

thanu team-3 al-alagappan-team-4

பொருளாளர் பதவிக்கு தாணு அணியின் சார்பில் டி.ஜி.தியாகராஜனும், ஏ.எல்.அழகப்பன் அணியில் ஏ.வெங்கடேஷனும் போட்டியிடுகின்றனர்.  

கெளரவ செயலாளர்கள் பதவிக்கு ராதாகிருஷ்ணனும், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாணு அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  •  thanu-team-1thanu team-2

21 செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில் தாணு அணியில் சார்பில் சங்கிலிமுருகன், எடிட்டர் மோகன், பிரமிட் நடராஜன், கோவைத்தம்பி, சித்ரா லட்சுமணன், வீ.சேகர், ஆர்.கே.செல்வமணி, எம்.கபார், ஹெச்.முரளி, எம்.வி.கோபால்ராம், ஆர்.மாதேஷ், அழகன் தமிழ்மணி, சுபாஷ் சந்திரபோஸ், சுப்பையா, செளந்தரபாண்டியன், விஜயமுரளி, டி.மன்னன், டேவிட் ராஜ், எஸ்.ஜோதி, ரிஷிராஜ், சாலை சகாதேவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

al-alagappan-team-2 al-alagappan-team-3

ஏ.எல்.அழகப்பன் அணியின் சார்பில் 21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில் ஆர்.வி.உதயகுமார், எஸ்.வீ.சேகர், விஸ்வாஸ் சுந்தர், சுரேஷ் காமாட்சி, ஆர்.வடிவேல், கே.விஜயகுமார், எஸ்.கே.விஜயன், கிஷோர்குமார், ஜி.கிச்சா, எஸ்.முத்துச்சாமி, எம்.ஏ. எட்வின்ராஜ், பியாரிலால் குண்டச்சா, ரகுநாதன் என்ற ரகு. ஜெ.வி.ருக்மாங்கதன், கே.பாலு, ஜாக்குவார் தங்கம், கலைப்புலி ஜி.சேகர், டாக்டர் கே.காளிதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் எந்த அணியிலும் இல்லாமல் சுயேச்சையாக அன்வர் அலி, பாலாஜி என்ற பாலசுப்ரமணியன், எஸ்.எஸ்.துரைராஜ், ஜெமினி ராகவா, கே.வி.குணசேகரன், ஜெயசித்ரா, ஜெயதேவி, ஜோதி, ஈ.கலைவாணன், வி.ஆர்.குமார், எஸ்.எஸ்.குமரன், மனோஜ்குமார், முக்தா சீனிவாசன், கே.முருகன், முத்து, எஸ்.முத்துசாமி, சி.நந்தகுமார், ஆனந்தி பிலிம்ஸ் நடரஜான், ஏ.என்.பவித்ரன், பிரபாதீஷ் சாமுவேல், பிரிமூஸ்தாஸ் பி., கே.ரகுநாதன், ராஜா என்ற பக்ரூதின் அலி அகமது, வி.ராமச்சந்திரன், ரங்கசாமி என்ற தங்கதுரை,  எஸ்.சரவணராஜ், ஷங்கர், சிவயோகன் ஏ.பி., எஸ்.வி.சோலைராஜா, ஆர்.சிவக்குமார், பி.சுதாகர், பி.ஜி.சுரேந்திரன், யோகாபுதீன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் வரும் ஜனவரி 25-ம் தேதி அண்ணா நகர் ரவுண்டானா அருகில் இருக்கும் கந்தசாமி நாயுடு கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறும். அன்றைக்கே முக்கிய பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும். செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை மறுநாள் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும்.

போட்டியிடும் இரு அணிகளும் தயாரிப்பாளர் உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.  

ஒரு அணியினர் தாங்கள் சந்திக்கும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி வாக்குகளை ‘கவர்’ செய்து வருகிறது. இன்னொரு அணியும் தங்களால் முடிந்ததை ‘வழங்கி’ வருவதாகவும் தகவல். 

இரு அணியினரும் எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் மூலமாகவும் முடிந்த அளவுக்கு தத்தமது அணியின் கொள்கை விளக்கங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

Our Score