இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஜனவரி 14, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் ஜனவரி 14, 2015

பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் புதன்கிழமையான இன்று ஜனவரி 14-ம் தேதியன்று 2 திரைப்படங்கள் ரிலீஸாகியுள்ளன.

1. ஐ

I-Movie-Stills-3

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் பிரமாண்டமான படம். இதில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பி.சி.ராம். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

2. ஆய்வுக்கூடம்

Aaivukkoodam-Movie-Stills-1

மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரித்திருக்கிறார். அவரே முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுகம் சத்யஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஆர்.பாண்டியராஜன் நடித்திருக்கிறார். 

மற்றும் ப்ரீத்தி, சொந்தர், பிரபுராஜ், ரியாஸ், பவுனி ஜெய்சன், நெல்லை சிவா, செம்புலி ஜெகன், ராஜராஜன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எஸ்.மோகன், இசை – ரமேஷ் கிருஷ்ணா, பாடல்கள் – டாக்டர். கிருதயா, துரைமுருகன், சன்ராஜா, ஸ்டண்ட் – சூப்பர்குட் ஜீவா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அன்பரசன்.

Our Score