நேற்று காலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “இன்று இரவு ‘என்னை அறிந்தால்’ படத்தின் டிரெயிலர் வெளியாகும்…” என்று அறிவிக்க.. நேற்று மாலைவரையிலும் சினிமாவுலகத்தில் பரபரப்பு நிலவியது.
சட்டென்று மாலையில் அது திசை மாறி.. இன்றைக்கு டிரெயிலர் ரிலீஸ் இல்லை. அது ஜனவரி 1-ம் தேதிதான் ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் அறி்க்கை மூலமாகச் சொல்ல புஸ்வாணமாகிவிட்டது.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் தனது அறிக்கையில், “உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்களுக்கு வருகின்ற புது வருடமான 2015-ன் ஆரம்பம் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அமர்க்களமாக துவங்க உள்ளது.
ஏற்கனவே அறிவித்து இருந்த இசையுடன், ‘என்னை அறிந்தால்’ படத்தின் முன்னோட்டமும் அன்றே வெளியாக உள்ளது.
சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் உலகெங்கும் பரவியதோடு குறைந்த காலக் கட்டத்தில் அதிகம் பேர் பார்த்த வரலாற்றையும் உண்டாக்கியது.
வரு
புது வருடத்தன்று ரசிகர்களுக்கு இந்த இரட்டிப்பு பரிசு மகிழ்ச்சி தரும் என்பதில் எங்களுக்கு பெருமை.. படப்பிடிப்பு முடிந்து, மற்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டு இருக்கிறது.
ஜனவரி 1-ம் தேதி வியாழக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பொங்கலுக்கு ‘என்னை அறிந்தால்’ வெளியாவதை தொடர்ந்து ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எல்லா தரப்பு மக்களுக்கும் இனிப்பு பொங்கலாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை..” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.









