‘சாஹசம்’ படத்திற்காக சிம்பு பாடிய பாடல்..!

‘சாஹசம்’ படத்திற்காக சிம்பு பாடிய பாடல்..!

‘சாஹசம்’ படத்திற்காக ‘தேசி தேசி தேசி கேள்(Girl)’ என்று உற்சாகமாக சிம்பு பாடிய பாடல் நேற்று சென்னையில் பதிவானது. கடந்த ஒரு மாத காலமாக லண்டனில் இருந்த சிம்பு சென்னை விமான நிலையத்தில் இறங்கியதுமே நேராக இசையமைப்பாளர் தமன் ஸ்டுடியோவுக்கு வந்து பாடினார்.

பிரஷாந்த் பாலிவுட் நடிகை நர்கீஸுடன் இணைந்து ஆடும் விசேஷமான ஐட்டம் பாடல் ஏற்கனவே படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. மதன் கார்க்கி எழுதிய வரிகளுக்கு ஏற்கனவே நடிகை லஷ்மி மேனன் பாடியிருந்தார். தற்போது பிரஷாந்திற்காக சிம்பு பாடியிருக்கிறார். இந்த தேசி கேர்ள் பாடலை பாடியதன் மூலம் இந்தியாவின் தலைசிறந்த பாடகர்கள் பாடியுள்ள ‘சாஹசம்’ படத்தில் சிம்புவும் இணைந்துள்ளார். சிம்பு பாடியதும் இந்த பாட்டு உச்சத்தை எட்டியது என்று மகிழ்ச்சியோடு பிரஷாந்த், சிம்புவை பாராட்டினார்.

‘இளசுகளின் இதய நாயகன்’ அனிருத் சமீபத்தில் ‘சாஹசம்’ படத்திற்காக நா.முத்துகுமார் எழுதிய ‘யாரிவள் யாரிவள் என்னாச்சி’ என்ற பாடலை பாடியது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் ‘சாஹசம்’ படத்தில் சங்கர் மஹாதேவன். ஸ்ரேயா கோஷல், மோஹித் சவுஹான், ஹனிசிங். அர்ஜித் சிங், ஆண்ட்ரியா ஆகியோரும் பாடியுள்ளனர்.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சாஹசம்’ படத்தில் ஐந்து பாடல்களுமே அற்புதமாக அமைந்துள்ளது என்று நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் தமனுக்கு டயோட்டா பார்சூனர் காரை பரிசாக வழங்கியதும் நாம் அறிந்ததே.

சிம்பு பாடியதோடு ‘சாஹசம்’ படத்தின் அனைத்து பாடல் பதிவும் நிறைவேறியது. இதன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

‘சாஹசம்’ படத்தில் பாடியுள்ள அனிருத், சிம்பு, மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், லஷ்மி மேனன், ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் தோன்றி சாஹசம் படத்தின் பாடல்களை நேரில் பாடவுள்ளார்கள்.

“இசை பிரியர்களுக்கு அமுதமாய் அமையவுள்ள ‘சாஹசம்’ படத்தின் பாடல்கள் வெகு விரைவில் வெளிவந்து எதிர்பார்ப்புகளை ஈடு செய்யும்..” என்று தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் பெருமிதத்தோடு கூறினார்.

Our Score