full screen background image

தொழில் நுட்ப வளர்ச்சியின் மோசமான பக்கத்தைச் சொல்ல வரும் ‘என்ஜாய்’ திரைப்படம்

தொழில் நுட்ப வளர்ச்சியின் மோசமான பக்கத்தைச் சொல்ல வரும் ‘என்ஜாய்’ திரைப்படம்
எல்.என்.எச். கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான k லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில்  நகைச்சுவை கலந்து  உருவாக்கப்பட்டுள்ள படம் ‘என்ஜாய்’.

இந்தப் படத்தில் மதன் குமார், டான்சர் விக்னேஷ் ஹரீஸ் குமார் நிரஞ்சனாஜீ, வி.அபர்ணா, சாய் தன்யா, ஹாசின் சாருமிசா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – K.N.அக்பர், இசை – K.N.ரயான், படத் தொகுப்பு – மணி குமரன். பின்னணி இசை – சபேஷ்- முரளி. பாடல்கள் – விவேகா, உமா தேவி. நடனப் பயிற்சி இயக்கம்- தினேஷ். சண்டை பயிற்சி இயக்கம் – டேஞ்சர் மணி, கலை இயக்கம் – சரவண அபிராமன்.

பல படங்களுக்கு புரொடக்சன் மேனேஜராக பணியாற்றிய பெருமாள் காசி இந்த ‘என்ஜாய்’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.

சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும்,  கருத்து  வெளிப்பாட்டு நன்மைகளையும்,  சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும், இளம் பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக  இதனைப் பயன்படுத்தினார்களா? இல்லை.. சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்கப்பட்டார்களா?  என்பதே இந்த ‘என்ஜாய்’ சொல்லும்  கதை.

இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசு மொழியான பதின்ம பருவத்து நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கும்  இந்தக் கதை, சிரிக்கவும் வைக்கும். சிந்திக்கவும் தூண்டும்.  சமூகம் கொண்டுள்ள தளைகளை உடைத்துவிடும் ஆயுதமாகவும் இருக்கும். இளைஞர்கள் கொண்டாடினால்தான் எந்த படமும் வெற்றி பெறும். அந்த வகையில் எங்களின் இந்த ‘என்ஜாய் ‘ படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்” என்கிறார் அறிமுக இயக்குநாான பெருமாள் காசி.

Our Score