full screen background image

ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்

ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்

புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம்  ராவுத்தர்  அவர்களின் ‘ராவுத்தர் மூவிஸ்’.

இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரி நடிப்பில் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்னும் படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தினை மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத் தொகுப்பாளராக பணிபுரிகிறார். அறிமுக இயக்குநரான கவிராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் முதல் பார்வை (First Look) போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்.

Our Score