தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடையவுள்ளது.
இதனால் சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுவரையிலான நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி தேர்தலின் வாக்குப் பதிவு வரும் மார்ச் மாதம் 26-ம் தேதியன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அட்டவணை :
வேட்பு மனுவிற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 23-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதிவரையிலும் சங்க அலுவலகத்தில் தரப்படும். 100 ரூபாயை கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை பிப்ரவரி 27-ம் தேதி முதல் மார்ச்-2-ம் தேதி மாலை 4 மணிக்குள் சங்க அலுவலகத்தில் இருக்கும் பெட்டியில் சேர்த்துவிட வேண்டும்.
வேட்பு மனுக்களை பரிசீலைனை செய்வது மார்ச்-2-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.
வேட்பு மனுக்களை மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச்-5-ம் தேதி மாலை 4 மணிவரையிலும் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.
மார்ச்-5-ம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
மார்ச்-3-ம் தேதியன்று தேர்தலில் நிற்கும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல்.. தேர்தலில் வாக்களிக்க இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
வாக்குப் பதிவு மார்ச் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறும்.
தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விபரங்கள் :
தலைவர் பதவிக்கு – ஒரு லட்சம் ரூபாய் மட்டும்
மற்ற நிர்வாகப் பதவிகளுக்கு – ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு – ரூபாய் பத்தாயிரம் மட்டும்.