full screen background image

“அடுத்த அஜீத், சிவகார்த்திகேயன்தான்…” – விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு..!

“அடுத்த அஜீத், சிவகார்த்திகேயன்தான்…” – விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு..!

“தமிழ்த் திரையுலக வரலாற்றில் அடுத்த அஜீத், சிவகார்த்திகேயன்தான்..” என்கிறார் பிரபல திரைப்பட விநியோகஸ்தரும், தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம்.

நேற்று மாலை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்ற ‘ரெமோ’ படத்தின் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் விநியோகஸ்தர்களின் சார்பில் பேசிய திருப்பூர் சுப்ரமணியம், “நான் இதுவரையிலும் கிட்டத்தட்ட 3000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்திருக்கிறேன். 35 வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். ஆனால் ரஜினி ஸார்  நடித்த ‘சிவாஜி’ படத்திற்கு பிறகு விநியோகம் செய்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. இப்போது பட விநியோகமும், திரையிடலும் வேறு மாதிரியாகப் போய்விட்டது.

dcim-93

ஆனால் இந்த ‘ரெமோ’ படம் எனக்கு அளித்த உற்சாகமும், புத்துணர்வும், என்னை மீண்டும் விநியோக துறையில் ஈடுபட செய்திருக்கிறது. பொதுவாக விநியோகஸ்தர்கள்தான் திரைப்படத்தை வாங்க தயாரிப்பாளரை தேடி போவார்கள். ஆனால் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா எந்தவித ஈகோவும் இன்றி எங்களை வந்து சந்தித்தது எல்லா விநியோகஸ்தர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

எங்களை சந்தித்து எங்கள் மூலமாக படத்தை விநியோகம் செய்ய தான் தயாராக இருப்பதாக சொன்னார் ராஜா. அவர் மூலமாக அனைவரையும் அரவணைத்து இந்த வேலையைச் செய்தோம். இந்தப் படம் தமிழ்நாடு முழுக்கவே பர்சென்டேஜ் அடிப்படையிலேயே தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் மிக ஆர்வமாக இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டனர்.

remo-success-meet-4

இந்த ‘ரெமோ’ திரைப்படத்தின் வெற்றிக்கு மூல காரணமே சிவகார்த்திகேயன்தான். தமிழ்ச் சினிமாவின் துவக்க்க் காலத்தில் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா.. இவர்களுக்கு அடுத்து எம்.ஜி.ஆர்., சிவாஜி.. இவர்களுக்கு அடுத்து ரஜினி, கமல்.. அவர்களுக்கும் அடுத்து அஜீத், விஜய்.. கடைசியாக இப்போது இந்த லிஸ்ட்டில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்திருக்கிறார்.

இதில் தியாகராஜ பாகவதர் மாஸ். பி.யூ.சின்னப்பா நடிப்பு.. எம்.ஜி.ஆர். மாஸ், சிவாஜி நடிப்பு, ரஜினி மாஸ், கமல் நடிப்பு, அஜீத் மாஸ்.. விஜய் நடிப்பு.. இதேபோல் இப்போது சிவகார்த்திகேயனும் மாஸான நடிகர்தான். அதை இந்தப் படத்தின் மூலமும் நிரூபித்துவிட்டார்.

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் சாரின் பெயர் டைட்டிலில் வந்தவுடன் இப்போதுகூட ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அந்த அளவுக்கு அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இங்கே இருக்கிறது.  

தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தாயாக வலம் வந்து கொண்டிருப்பவர் சரண்யா மேடம். ‘ரெமோ’ படத்தில் அவரின் கதாபாத்திரம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை அள்ளிக் குவித்து கொண்டிருக்கிறது.” என்றார்.

அப்போ ‘விஜய்’ இடம் விஜய்சேதுபதிக்கா..?  கால்குலேஷன் சரியாத்தான் இருக்கு.

Our Score