full screen background image

‘மக்கள் இயக்குநர்கள்’ பட்டத்தை வென்ற இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி

‘மக்கள் இயக்குநர்கள்’ பட்டத்தை வென்ற இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி

Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் திரைப்படம் வீட்ல விசேஷம்.’

பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி  நடிகர்கள் நடித்துள்ளனர். RJ.பாலாஜி – N.J.சரவணன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.

இத்திரைப்படம் வரும் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ஆடியோ விஷேசம்’ என்ற பெயரில் நேற்று மாலை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது.

இந்த விழாவில் கமர்சியல் பார்முலா சினிமாவில் மக்களை மகிழ்வித்தும், வணிக ரீதியாக பெறும் வெற்றியடைந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, பி.வாசு ஆகிய இயக்குநர்களுக்கு ‘மக்கள் இயக்குநர்‘ என்ற பட்டம் கொடுத்து படக் குழுவினர் கௌரவித்தனர்.

இவ்விழாவினில் இயக்குநர் பி.வாசு பேசும்போது, “குடும்பங்களை சென்றடையும் படங்களை அதன் பாணியில் புரோமோஷன் செய்கிறார் பாலாஜி. இது போன்ற படத்திற்கு தயாரிப்பாளரும், அதற்கு உயிர் கொடுக்கும் நடிகர்கள் மட்டும் கிடைத்துவிட்டால்போதும், படம் உயிர்பெற்றுவிடும்.

ஒரு படத்திற்கு பிளானிங் என்பது முக்கியமான விஷயம். படத்தின் அனைத்து கூறுகளையும் மனதில் வைத்து படத்தை திட்டமிட்டு எடுக்க வேண்டும்.

இந்தப் படத்தில் நடிப்பு ராட்சசி’ நடிகை ஊர்வசி நடித்துள்ளார். ஊர்வசி தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களின் வசனங்களையும் மனதில் வைத்து அதற்கேற்றார் போல், மற்றவர்களுக்கும் உதவுவார். அத்தோடு சரியாக ரியாக்ட்டும் செய்வார்.

எனக்கு மிகவும் பிடித்தமான சத்யராஜூம் இதில் நடித்துள்ளார். சத்யராஜ் நடிப்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து, பெரிய அர்ப்பணிப்புடன் வேலை செய்வார். அதனால்தான் அவருடைய பல கதாபாத்திரங்கள் இப்போதும் நின்று பேசுகின்றன.

தமிழகத்திற்கு வந்து இது போன்ற படங்களை தயாரிக்கும் போனி கபூருக்கு நன்றி.  இந்த படத்தின் வெற்றி எங்கள் படத்தைவிட மிகப் பெரிய வெற்றியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்…“ என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “நாங்கள் எடுத்த பழைய படங்களை நியாபகம் வைத்து எங்களை அழைத்தது படக் குழுவின் பெருந்தன்மை. பாலாஜியின் உழைப்பு மிகப் பெரியது. பல படங்களில் காமெடியனாக நடித்து, பின்னர் ஹீரோவாகி, தற்போது இயக்குநராகவும் மாறியுள்ளார். ஒரு கதையை பார்வையாளர்களுக்கு எப்படி சொன்னால் பிடிக்கும் என்பதை தெரிந்து செய்பவர் பாலாஜி.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பல நாள் முன்னாடி நான் கேட்டிருந்தேன், ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை. இந்தப் படத்தை பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். படத்தின் பாடல் மற்றும் டிரைலர் நன்றாக இருக்கிறது. படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்…” என்றார்.

இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “நான் சினிமாவில் அறிமுகப்படுத்திய பாலாஜி நடிகராகி இப்போது இயக்குநராக மாறி இருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. பாலாஜியிடம் நல்ல கிரியேட்டிவ் திறமை இருக்கிறது. நான் அவர் திறமையைத்தான் பயன்படுத்தினேன். அவர் இப்போது அவரது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இந்தியைவிட பல திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் உள்ளனர். அதனால் இந்த படம் மிகப் பெரிய வெற்றியடையும். படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் சிறப்பாக உள்ளன. படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்..” என்றார்.

Our Score