“தமிழ்ச் சினிமாவின் கதைகள், நமது மண் சார்ந்து இருக்க வேண்டும்..” – இயக்குநர் வீ.சேகரின் கோரிக்கை..

“தமிழ்ச் சினிமாவின் கதைகள், நமது மண் சார்ந்து இருக்க வேண்டும்..” – இயக்குநர் வீ.சேகரின் கோரிக்கை..

‘கங்காரு’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வீ.சேகர், “தமிழ்ச் சினிமாவில் சொல்லப்படும் கதைகள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துவது போல இருக்க வேண்டும்..” என்றார்.

“கங்காரு’ நிச்சயம் நல்ல படமாகத்தான் தெரிகிறது. படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல் காட்சிகளைப் பார்க்கின்றபோது அந்த நம்பிக்கையை அளிக்கிறது.

இப்போதைய படங்களையெல்லாம் பார்க்கும்போது டெக்னிக்கல் விஷயத்தில் தமிழ்ச் சினிமா வெகுவாக வளர்ந்திருப்பது தெரிகிறது.  வெளிநாட்டிலிருந்து எவ்வளவோ  தொழில் நுட்பங்களை நாம் பெறலாம். ஆனால் தமிழ்ச் சினிமாவில் சொல்லப்படும் கதை, திரைக்கதை, கருத்து போன்றவை நமது தமிழ் கலாச்சாரம் சார்ந்ததாக இருக்கவேண்டும். பண்பாட்டை நம்மிடமிருந்துதான்  எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு சட்டை வெளிநாட்டில் எடுக்கலாம். ஆனால் குழந்தை நமதாக இருக்க வேண்டும். சட்டை பாரின்ல எடுக்கலாம்.. குழந்தையே பாரின்ல வாங்க முடியுமா..? சினிமாவும் அப்படித்தான். தமிழ்ச் சினிமாவில் இப்போது நிறைய பாரின் குழந்தைகளை அப்படிப் பார்க்கிறேன்…” என்றார் வீ.சேகர்.

Our Score