full screen background image

“பீட்டா அமைப்பில் உறுப்பினர்களான நடிகர், நடிகைகள் அதிலிருந்து வெளியேற வேண்டும்..” – இயக்குநர் சேரன் கோரிக்கை..!

“பீட்டா அமைப்பில் உறுப்பினர்களான நடிகர், நடிகைகள் அதிலிருந்து வெளியேற வேண்டும்..” – இயக்குநர் சேரன் கோரிக்கை..!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, நடிகர் சங்க வளாகத்தில் தற்போது அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நேரத்தில் மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை இயக்குநர் சேரனின் தலைமையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சிலர் நேரில் சென்று நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளிடம் கொடுத்திருக்கிறார்கள்.

seran-rajini-ksr-suresh kamatchi-2

அந்த மனுவில் அவர்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகளாக…

1. தற்போது இருக்கும் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்கிற பெயரை ‘தமிழ் திரைப்பட நடிகர் சங்கம்’ என்று பெயர் மாற்ற வேண்டும்.

2. PETA அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகர், நடிகைகள் உடனடியாக அந்த அமைப்பைவிட்டு வெளியேற வேண்டும்.

3. இனிவரும் காலங்களில் எந்தவொரு நடிகர், நடிகையரும்  வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோ, விளம்பரப் படங்களில் நடிப்பதோ கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஒரு நாள் உணர்வாக இல்லாமல்… உடனடியாக செயல்படுவது மட்டுமே தமிழுக்கும் தமிழர்களுக்கும் நீங்கள் காட்டுகின்ற நன்றி..” என்று அந்த கோரிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

Our Score