full screen background image

“என் பாட்டுக்கு நானே 30 ரூபா கொடுக்கணுமா?” – ஆர்.சுந்தர்ராஜனின் கேள்வி..!

“என் பாட்டுக்கு நானே 30 ரூபா கொடுக்கணுமா?” – ஆர்.சுந்தர்ராஜனின் கேள்வி..!

பாடல்களை எழுதுபவர் ஒருவர்.. இசையமைப்பது ஒருவர்.. சிச்சுவேஷன் சொல்லி கேட்டு வாங்கும் இயக்குநர் ஒருவர்.. ஆனால் கடைசியில் பல ஆண்டுகள் கழித்தும் அதன் பயனை வேறொருவர் எந்தவித உழைப்புமில்லாமல் சுரண்டுகிறார் என்றால் இந்த மூவரின் உழைப்புக்கு என்ன புண்ணியம்..?

சினிமாவில் காலம் காலமாக நடக்கின்ற கதையைத்தான் இன்றைக்கு ‘கன்னக்கோல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் கொஞ்சம் நகைச்சுவையாகவே வெளியிட்டார்.

“நான் இயக்கிய படம் ‘பயணங்கள் முடிவதில்லை’.. அதுல ஒரு பாட்டு ‘இளைய நிலை பொழிகிறதே’ன்னு இருக்கு.. அந்த பாட்டை என்னோட செல்போன்ல பதிவு செய்யணும்னா நான் முப்பது ரூபா, செல் கம்பெனிக்காரனுக்கு கட்டணுமாமா்ம்..! இதென்னங்கய்யா நியாயம்..?

இதுல பாட்டை எழுதினவருக்கு பத்து காசு பிரயோசனமில்லை. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் ஒண்ணுமில்லை.. படத்தோட டைரக்டர் எனக்கும் ஒண்ணுமில்லை. ஆனா எவனோ ஒருத்தனுக்கு காசு போகுது..! இதுதான்யா சினிமாவுலகம்.. இங்கே ஒரு முறைப்படுத்துதலே இல்லாமல் தொழில் நடந்துக்கிட்டிருக்கு..” என்று ரொம்பவே வருத்தப்பட்டார்.

இவருக்குப் பின் பேச வந்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், “முன்னாடியெல்லாம் படம் ஆரம்பிக்கும்போதே ஆடியோ ரைட்ஸுக்கான காசு சரியா நம்ம கைக்கு முதல்ல வந்து சேரும். அதை வைச்சு சில சின்னச் சின்ன வேலைகளை தயாரிப்பாளர்கள் முடிச்சுக்குவாங்க. ஆனா இப்போ.. தயாரிப்பாளரே சொந்தமா சிடி போட்டு.. வித்தாகூட வாங்க ஆளில்லை. ப்ரீயா கொடுத்தால்கூட வாங்கவும் ஆளில்லை.. இந்த அளவுக்குத்தான் ஆடியோ ரைட்ஸ் வியாபாரம் இருக்கு. பாட்டு வந்த உடனேயே ப்ரீ டவுன்லோடு உடனேயே கிடைச்சிருது. எல்லாரும் அதையே செஞ்சு கேட்டுர்றாங்க.. அப்புறம் எப்படி ஆடியோ பிஸினஸ் வளரும்..?” என்றார்.

அது இளையராஜா காலம் ஸார்..! அதுனால தேடி வந்து கொடுத்தாங்க.. இப்போ..? பெரிய இசையமைப்பாளர்கள் என்று சொல்பவர்களின் பாடல்களை பிஸினஸ் மோடிவ் என்ற பெயரில் விளம்பரத்திற்காக சில பல பெரிய கம்பெனிகள் கருப்புப் பணத்தை அள்ளிக் கொடுத்து கபளீகரம் செய்கின்றன.!

 ஒரு முறை மட்டுமே கேட்டுவிட்டு தூக்கிப் போட்டுவிடக் கூடிய அளவுக்குத்தான் இப்போதைய பாடல்கள் வருகின்றன. அதனால்தான் ஒன் டைம் கேக்குறதுக்காக 100 ரூபா செலவு செய்யணுமான்னு இசை ரசிகர்களும் யோசிக்குறாங்க..!

நல்ல இசையை கொடுக்கச் சொல்லுங்க ஸார்.. தானும் வாங்கி.. அடுத்தவனுக்கும் வாங்கித் தருவான் இசை ரசிகன்..!

Our Score