16 புதிய டெக்னீஷியன்களுடன் யாம் இருக்க பயமே..!

16 புதிய டெக்னீஷியன்களுடன் யாம் இருக்க பயமே..!

‘யாம் இருக்க பயமேன்’ என்பது இதுவரை தைரியமூட்ட சொல்லப்பட்ட முருக பக்தி கொண்ட வாக்கியமாகும்.

இந்த வாக்கியத்துக்கு எதிர்மறையான   கருத்தைக் கொண்ட ‘யாம் இருக்க பயமே’  என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தை ஆர்.எஸ். இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட்  குமார்  மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து  மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.

திகில் படங்களை கண்டு இருக்கிறோம், விலா  நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவை  படங்களை கண்டு களித்திருக்கிறோம். ஆனால் இந்த இரண்டும் ஒன்றாக, ‘யாம் இருக்க பயமே’ நகைச்சுவை கலந்த திகில் படமாக இருக்கும் என்று கூறுகிறார் இதன் இயக்குனர் டி.கே.

‘கழுகு’ கிருஷ்ணா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இவருக்கு இணையாக ரூபா மஞ்சரி நடிக்க, ஓவியா மற்றும் ஆதவ் கண்ணதாசன்  இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றி படங்களாகும் ராசியுள்ள  ‘சூது கவ்வும்’  கருணாவும் இந்த படத்தில்  ஒரு  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் மிகச் சிறப்பான ஒரு விஷயம், பதினாறு புதிய தொழில் நுட்ப கலைஞர்களை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்கள். இப்படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. 

Our Score