full screen background image

சிஷ்யன் வடிவேலின் ‘கள்ளப்படம்’ படத்தை வாங்கி வெளியிடும் குரு மிஷ்கின்..!

சிஷ்யன் வடிவேலின் ‘கள்ளப்படம்’ படத்தை வாங்கி வெளியிடும் குரு மிஷ்கின்..!

முன்னணி இயக்குநர்கள் தங்களது உதவி இயக்குனர்கள் படங்களை தயாரித்து, இயக்கி, வெளியிட உதவி புரியும் ஆரோக்கியமான பழக்கம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறது.

இயக்குனர் ஷங்கர் தனது சிஷ்யர் காரத்திக் G.க்ரிஷ் இயக்கிய ‘கப்பல்’ படத்தை வாங்கி வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு அது பக்க பலமாய் அமைந்தது.

இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து ‘பிசாசு’ படத்தின் வெற்றி தந்த உவகையில் இருக்கும் இயக்குனர் மிஷ்கின், தனது சிஷ்யர் வடிவேல் இயக்கியிருக்கும் ‘கள்ளப்படம்’ என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

Director vadivel

இந்தக் ‘கள்ளப்படம்’ என்ற திரைப்படத்தில் இயக்குநர் வடிவேல், லட்சுமி பிரியா, ஸ்ரீராம் சந்தோஷ், காகின் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.  ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே இசையமைத்திருக்கிறார். ஆனந்த் பொன்னிரவன் தயாரித்திருக்கிறார்.

_MG_8781

மிஷ்கினின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘Lone Wolf Productions’ சார்பில் ‘கள்ளப்படம்’ திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

_MG_3081  

இது பற்றி பேசிய இயக்குநர் மிஷ்கின், “நான் இந்த படத்தைப் பார்த்தேன்.  என்னை பொறுத்தவரையில் இப்படம் தமிழ் சினிமாவின்  தரமான படங்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும். வடிவேல் எனது சிஷ்யன் என்று சொல்லி பெருமிதம் கொள்ளும் அதேவேளையில், இப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

_MG_0682

லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர்  கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத் தொகுப்பாளர் காஜின், இயக்குநர் வடிவேல் ஆகியோரது இந்த கூட்டணி நம்பிக்கையின் அச்சாணியாய் விளங்குகிறது. சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் ஒரு விருந்தாய் அமையும்…” என பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.  

Our Score