full screen background image

நடிகர் சூர்யா பெயரில் கொலை மிரட்டல் – சினிமா இயக்குநர் புகார்..!

நடிகர் சூர்யா பெயரில் கொலை மிரட்டல் – சினிமா இயக்குநர் புகார்..!

‘சரவணன் என்கிற சூர்யா’ படத்திற்கு ‘கில்டு’ அமைப்பு தடை விதித்து, ‘நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட்’டை நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகனும் நடிகருமான சூர்யாவிடம் பெற்று வரும்படி தயாரிப்பாளரிடம் கூறியிருப்பதையும் இந்தப் பதிவில் சொல்லியிருந்தோம்.

அதன் பின்பு இயக்குநர் தரப்பிலும், தயாரிப்பாளர் தரப்பிலும் சூர்யாவை அணுகியபோது எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லையாம். படத்தின் டைட்டிலை மாற்றியே தீர வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்பட்டு வருகிறதாம்.. இந்தத் திடீர் எதிர்ப்பை படத்தின் இறுதிக் கட்டத்தில் எதிர்பார்க்காத தயாரிப்பு தரப்பு பல்வேறு வழிகளிலும் காய் நகர்த்தி வருகிறது..

இந்த நேரத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இந்தப் படத்தின் இயக்குநர் முருகராஜா நடிகர் சூர்யா தரப்பில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக புகார் கொடுக்க பிரச்சினை மீண்டும் பெரிதாகியுள்ளது..

முருகராஜா கொடுத்துள்ள மனுவில், ‘சரவணன் என்கிற சூர்யா’, என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து, இயக்கி, நானே கதாநாயகனாகவும் நடித்துள்ளேன். இந்த படத்தின் தலைப்பை முறையாகவும் பதிவு செய்துள்ளேன். இந்த சூழ்நிலையில் படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி, நடிகர் சூர்யா தரப்பில் இருந்து எனக்கு வற்புறுத்தல் வந்தது.

நான் படத்தின் தலைப்பை மாற்ற மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு இப்போது கொலை மிரட்டல் வருகிறது. அடியாட்கள் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. படத்தையும் வெளியிட விடாமல் தடுத்துவிட்டனர். நடிகர் சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். .. என்று தனது தெரிவித்துள்ளாராம்.

ஒரு சின்னப் பிரச்சினையை தேவையில்லாமல் நடிகர் சூர்யா தரப்பு பெரிதாக்குவதாக தமிழ்ச் சினிமா பிரபலங்கள் கருதுகிறார்கள்.. பெரிய இடத்துப் பிரச்சினை என்பதாலேயே தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் சங்கமும் இதில் பெரிதாய் உதவவில்லையாம்.. ஆக மொத்தம் பாவமாகிவிட்டார்கள் இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும்..!

Our Score