குடும்ப பிரச்னைகள் காரணமாக சில மாதங்களாக சினிமாவைவிட்டு விலகி இருந்த அஞ்சலி, இப்போது மீண்டும் பழைய தீவிரத்துடன் நடிப்புத் துறைக்குத் திரும்பியிருக்கிறார்.
இயக்குநர் கோனா வெங்கட்டின் தெலுங்கு படத்தில் கடந்த 20 நாட்களாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடந்து வருகிறதாம். இது தவிர மேலும் இரண்டு தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறாராம் அஞ்சலி.
இதோடு கூடவே பம்பர் பரிசாக தெலுங்கின் டாப் ஸ்டார்களில் ஒருவரான பாலையா என்கிற பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் அஞ்சலியும் ஒரு ஹீரோயினாம்.. மெயின் ஹீரோயின் திரிஷா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் துவங்கியது. தாசரி நாராயணராவ்தான் கிளாப் அடித்துத் துவக்கி வைத்தார்.
பாலையாவுடனேயே நடிக்கப் போவதால் அஞ்சலியை இனி தெலுங்கில் கால் வைத்து யாரும் மிரட்ட முடியாது என்பது உண்மை. இனி அடுத்து தமிழிலும் ஒரு ஆளைப் பிடித்து கோடம்பாக்கத்தில் காலை ஊன்ற வேண்டியதுதான் பாக்கி..!
அஞ்சலியை என்னமோன்னு நினைச்சா..? பாப்பா பக்குவமாத்தான் இருக்கு..! பொழைச்சுக்கும்..!