ஒரு சில நேரங்களில் பாலிவுட் ஹீரோயின்கள் வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு தென்னிந்திய அதிலும் குறிப்பாக தமிழ் நடிகைகள் யாரும் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவதில்லை.. அவர்களைப் பற்றியே வந்திருந்தாலும் சென்டிமெண்டடாக பேசி தப்பிப்பார்களே ஒழிய.. நெத்தியடியெல்லாம் அடிக்க முயல்வதில்லை..
இன்றைக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அடித்திருக்கும் இரண்டு ட்வீ்டடுகள், பரபரப்பு செய்திகளுக்கு அலையும் மீடியா உலகத்தை செருப்பால் அடித்ததுபோல இருக்கிறது..!
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் TOI Entertainment என்ற பெயரில் டிவீட்டிரிலும் செயல்படுகிறது. உடனடி செய்திகளை இதில்தான் அப்லோட் செய்வார்கள்.
இன்று காலை இந்த ட்வீட்டர் அக்கவுண்ட்டில் தீபிகா படுகோனேவின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அதற்கு, “OMG : Deepika Padukone’s cleavage show!” (’ஓ கடவுளே : தீபிகா படுகோனின் (மார்பக) பிளவுக் காட்சி’) என்ற விளக்கத்தையும் கமெண்ட் செய்திருந்தார்கள்.
அந்தப் புகைப்படம் தீபிகா படுகோனே சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு விழாவின் வீடியோவில் இருந்து ஸ்டில் செய்யப்பட்டது.
இந்த ட்வீட்டைப் பார்த்தவுடன் பொங்கி எழுந்த தீபிகா படுகோனே, “இந்தியாவின் பெரிய நாளிதழ்.. இதுதான் ‘செய்தி’யாம்!” என்று பதிலுக்கு ட்வீட்டியுள்ளார்.
அடுத்து இன்னொரு ட்வீட்டில் “ஆமாம்.. நான் பெண். அதனால் எனக்கு மார்பகங்கள் இருக்கின்றன. அதனால்தான் பிளவும் இருக்கிறது. இதில் உங்களுக்கென்ன பிரச்னை…?” என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறார்.
மேலும், “பெண்ணுக்கு மரியாதை கொடுப்பது எப்படி என்றெல்லாம் தெரியாமல், பெண்ணுரிமை குறித்தெல்லாம் பேசாதீர்கள்…” என்றும் செருப்படி தந்திருக்கிறார்.
தீபிகா படுகோனேவின் இந்த டிவீட்டர் கமெண்ட்டுகளுக்கு வந்து குவிந்த ஆதரவு கமெண்ட்டுகளை பார்த்து பயந்து போன டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திப் பிரிவு, இதன் பின்பு அவசர அவசரமாக அந்த ட்வீட்டை நீக்கியுள்ளது.
ஏற்கெனவே சில முறை தீபிகாவை இதே போன்று இதே டைம்ஸ் ஆஃப் இந்தியா டீஸிங் செய்வதுபோலவே செய்திகளை வெளியிட்டிருக்கிறதாம். அந்தக் கோபமும் இன்றைக்கு சேர்ந்து கொள்ள.. தீபிகா வெளுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்..!
வெல்டன் தீபிகாஜி..!