full screen background image

நடிகர் விஷாலை கைது செய்ய கோரிக்கை..!

நடிகர் விஷாலை கைது செய்ய கோரிக்கை..!

என்னடா இன்னும் கிளம்பலையே நினைச்சோம். ஒருத்தங்க கிளம்பிட்டாங்க.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் நாசர் தலைமையிலான அணி தங்களது அணியின் அறிமுக்க் கூட்டத்தை ராகவேந்திர மண்டபத்தில் கூட்டியிருந்த்து.

அந்தக் கூட்டத்தில் நடிகர் விஷால் நடிகர் ராதாரவியை கடுமையாகத் தாக்கி பேசினார்.

விஷால் தன் பேச்சில், “அந்த டீம்ல யாரைக் கேட்டாலும் ராதாரவி அங்க இருப்பார். இங்க இருக்கார். சாவு எங்க நடந்தாலும் முதல் ஆளா வந்து நிப்பார்ன்னு சொல்றாங்க. எல்லா சாவு வீட்டுக்கும் போறவன் வெட்டியான்தான். அவன்தான் அங்க போய் நிப்பான்.. எல்லாரும் எல்லாத்துக்கும் போய் நிக்க முடியாது. ‘வெட்டியான்’னு நான் சொன்னது கிண்டலுக்கு மட்டும்தான். அது யாரையும் மரியாதைக் குறைவா சொல்றதுக்காக இல்லை..” என்று குறிப்பிட்டுப் பேசினார்.

இது குறித்து மறுவாரம் அதே ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற சரத்குமார் அணியின் அறிமுக்க் கூட்டத்தில் பேசிய நடிகர் சரத்குமார், “விஷாலின் இந்த ‘வெட்டியான்’ என்ற பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தப் பேச்சுக்காகவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்..” என்று கண்டித்தார்.

இதேபோல் இது பற்றி பேசிய நடிகர் ராதாரவி, “என்னைய ‘வெட்டியான்’னு சொல்லியிருக்கான் விஷால். நான் வெட்டியான்தான்.. வெட்டியான் எவ்வளவு முக்கியம்ன்னு அவனுக்குத் தெரியலை.. வெட்டியான் இல்லைன்னா யாரை வைச்சு பொணத்தை தூக்குவ..? பொணத்தைத் தூக்கலைன்னா வீடு நாறிரும்.. உன் வீட்லேயும் சாவு நடக்கும்ல. அப்போ தெரியும்..” என்று தன் வழக்கமான பாணியில் சீறித் தள்ளினார்.

இந்த நிலைமையில்  இந்த ‘வெட்டியான்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி பேசியதற்காக நடிகர் விஷாலை கைது செய்ய வேண்டும் என்று ‘தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்கிற அமைப்பு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறது.

vettiyaan-comment-vishal-case

தங்களது புகார் கடிதத்தில், “நடிகர் விஷால் சமீபத்தில் ஒரு மேடையில் தமிழ் இனத்தைச் சேர்ந்த ‘வெட்டியான்’ தொழில் செய்யும் சமுதாயனத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.   அதனால்  அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் கைது செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளது.

இப்படி தினத்துக்கு ஒருத்தர் எங்கிட்டிருந்துதான் புதுசா, புதுசா கிளம்பி வர்றாங்கன்னு தெரியலையே..!? 

Our Score